ஆந்திரா பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தின் காரணமாக வேன் இழுத்துச் செல்லப்பட்ட காணொளி சமூக வலைத்தளத்தில் பரவலாக வைரலாகி வருகிறது…
ஆந்திர மாநிலத்தில் ஸ்ரீகாகுளம் விசாகப்பட்டினம் காக்கிநாடா உள்ளிட்ட பல இடங்களில் கனமழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது, இதனால் அந்த பகுதிகளில் கோடைகள் ஆறுகள் ஆகியவற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது, ஆர்ப்பரித்து ஓடிக் கொண்டிருக்கும் வெள்ளத்தில் தரை பாலத்தை கடந்து சென்ற வேன் ஒன்று இழுத்து செல்லப்பட்டது, நிலைத்தடுமாறி வெள்ளத்தில் வேன் அடித்து சொல்லப்பட்டு சிறு தூரத்திலேயே ஒதுங்கியது பிறகு சுற்றுவட்டார பொதுமக்கள் வேனில் உள்ள ஓட்டுனரை பத்திரமாக காப்பாற்றி அவருக்கு முதலுதவி தந்தனர், மேலும் இந்த காணொளி ஆந்திராவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது மேலும் இந்த காணொளி இணையதளத்தில் பரவலாகி மக்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது, ஓடைகளும் ஆறுகளும் செல்ல வேண்டிய இடத்தில் தடங்கல் அமைத்தால் மனிதர்கள் தடம் பதிக்காமல் போய்விடுவோம் என்று பலரும் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்..!!!




