புரட்டாசி மாதத்தில் மட்டும் வெங்கடேச பெருமாளுக்கு நோன்பு இருப்பது ஏன்?.. இதன் சிறப்பு என்ன?..

புரட்டாசி மாதம் என்றாலே பெருமாளுக்கு உகந்த மாதம் என்பது நம் அனைவருக்கும் தெரிந்து ஒன்று. மேலும் நம் கண் முன்னே புரட்டாசி என்றாலே பெருமாள் தான் தோன்றுவார் என்பதும் குறிப்பிடத்தக்கது. புரட்டாசி மாதம் முழுவதும் பெருமாளுக்கு விரதம் இருப்பார்கள் இந்த மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் நெற்றி நிறைய திருமணிட்டு பாத்திரம் ஏந்தி வீடு வீடாகச் சென்று நாராயணா கோபாலா என்று உச்சரித்து வீடு வீடாக அரிசி வாங்கி அதை அரைத்து அதில் மாவிளக்கு எட்டு பெருமாளை வணங்குவது இன்றும் கிராமப்புறங்களில் நடைமுறையில் இருக்கிறது. புரட்டாசி மாதத்தில் வரும் அனைத்து சனிக்கிழமைகளிலும் விரதம் இருந்து பெருமாளுக்கு பூஜை செய்வார்கள். ஆனால் பெரும்பாலான நகரங்களில் இந்த பழக்கம் குறைவாக இருக்கிறது. பெருமாளுக்கு உரிய மாதமான இந்த புரட்டாசியில் நவகிரகங்களில் மகாவிஷ்ணுவின் அம்சமாக உருவானவர் புதன் பகவான் புதன் கிரகம் உச்ச பலம் பெறுவது கன்னி ராசியில் எனவேதான் சூரியன் கன்னி ராசியில் சஞ்சரிக்கும் இந்த புரட்டாசி பெருமாளுக்கு உரிய மாதம் என பெரியவர்கள் கூறுகிறார்கள் அதனுடைய பெரும்பாலும் புரட்டாசி மாதத்தில் கன்னி ராசியில் சூரியனோடு புதனும் இணைந்திருப்பதால் சூரியனுக்கு உரிய தேவதை பசுபதி என்று அழைக்கப்படும் சிவபெருமான். புதனுக்கு உரிய பிரதி தேவதை நாராயணன் இவர்கள் இருவரும் தெய்வீக மூளையாக கருதப்படும் கன்னி மூளையில் இணைவது சங்கரநாராயணரின் நினைவாக கருதப்படுகிறது. சூரியன் சூரிய நாராயண சுவாமி என்று பெயர் பெற்ற காரணம் இதுதான். இதன் மூலம் சிவனும் ஒன்று என்ற கருத்து நமக்கு நன்றாகவே தெரிகிறது எனவே தான் புரட்டாசி மாதத்தில் சைவ வைணவ வேதம் இன்றி பெரும்பாலான இந்துக்கள் அசைவ உணவினை தவிர த்து சைவ உணவுகளை மட்டுமே உட்கொள்வார்கள். மேலும் புரட்டாசியில் புதன்கிழமை தானே சிறப்பு பெற வேண்டும் ஏன் சனிக்கிழமை சிறப்பு பெறுகிறது என்றால் பொதுவாக பெருமாளின் அடியவர்கள் மீது சனிபகவான் தந்த முழு தாகத்தையும் காண்பிப்பதில்லை மேலும் புரட்டாசி சனிக்கிழமை அன்று அவரது வீரியம் குறைந்திருக்கும் என புராணங்கள் சொல்கிறது இந்நிலையில் சனிக்கிழமையில் பெருமாளை சேமிப்போரை சனி ஒன்றும் செய்வதில்லை என்ற நம்பிக்கையினால் புரட்டாசி சனிக்கிழமை மிகவும் சிறப்பு பெற்று காணப்படுகிறது.

Read Previous

உங்க வீட்ல ஃப்ரிட்ஜ் யூஸ் பண்றீங்களா?.. அப்போ இந்த தவறை இனி செய்யாதீங்க..!!

Read Next

காகத்திற்கு சாதம் வைக்கும் போது செய்யக்கூடாத சில தவறுகள்.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular