
ஆன்மீகத்தில் விருப்பம் இருக்கும் நபர்கள் கண்டிப்பாக இந்த ஆன்மீக குறிப்புகளை தெரிந்து கொள்ளுங்கள்..!!
ஆன்மீகத்தில் விருப்பம் இருப்பவர்கள் கண்டிப்பாக இந்த குறிப்புகளை எல்லாம் தெரிந்து கொண்டு செயல்படுங்கள். கடவுளுக்கு படைக்கும் பூக்களை ஒருபொழுதும் முகர்ந்து பார்க்கக்கூடாது. துளசியையும் வில்வம் இருட்டிய பிறகு பறிக்கக் கூடாது. விபூதியை தண்ணீரில் குழைத்து பூசக்கூடாது. அழகுக்காக கண்ணாடி பார்த்துக்கொண்டு திருநீர் வைக்கக் கூடாது. கற்பூரம் எரிந்து கொண்டிருக்கும்போது அவசரமாக ஊதி அணைக்க கூடாது. காலை 5 மணிக்கு மேல் ஒருபோதும் உறங்கக்கூடாது. தலைவாழை இலையில் நுனிப்பகுதியை ஒருபோதும் வெட்டக்கூடாது. தலை வாழை இலையை இரண்டாகப் பிரிக்கக்கூடாது. நாம் சாப்பிடும் போது சாப்பாட்டில் நம் நிழல் விழக்கூடாது. சாப்பிட்டு கை கழுவிய பின்னர் அந்த நீரை பிறர் மீது படும் அளவிற்கு உதறக்கூடாது.