
ஆன்மீக குறிப்புகள்..!! சனிக்கிழமை அன்று மறந்தும் கூட இதையெல்லாம் செய்து விடாதீர்கள்..!!
ஆன்மீக ரீதியாக ஒரு சில கிழமைகளில் சிலவற்றையெல்லாம் செய்யக்கூடாது என்று கூறுவார்கள். அந்த நிலையில் சனிக்கிழமை அன்று மறந்தும் கூட இதையெல்லாம் ஒருபோதும் செய்து விடாதீர்கள். அது என்ன என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
சனிக்கிழமை அன்று மறந்தும் கூட எண்ணெய் பொருட்கள் வாங்கக்கூடாது. மற்றும் சனிக்கிழமை அன்று கசப்பு உணவுகளை ஒருபோதும் சமைக்க கூடாது. சனிக்கிழமை அன்று நகம் மற்றும் முடி போன்றவற்றை வெட்டக்கூடாது. சனிக்கிழமை அன்று வீடு துடைக்க மற்றும் கழுவக்கூடாது. புது துணிகள் சனிக்கிழமை அன்று ஒருபோதும் எடுத்து விடாதீர்கள். சனிக்கிழமை அன்று இறப்பு வீட்டிற்கு சென்றால் அதிக நேரம் அங்கு இருக்காமல் விரைவில் வீடு திரும்புவது மிகவும் நல்லது. சனிக்கிழமை அன்று ஒருபோதும் திருஷ்டி கழித்து விடாதீர்கள். இதையெல்லாம் கண்டிப்பாக தெரிந்து கொண்டு செயல்படுவதன் மூலம் நல்ல பலனை பெறலாம்.