ஆன்மீக சாஸ்திரத்தின் படி வீட்டில் செய்யக்கூடாத ஒரு சில குறிப்புகள் இதோ..!!

இந்த நவீன காலகட்டத்தில் ஒரு சிலர் ஜாதகம் மற்றும் ஆன்மீகம் போன்ற வற்றையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் பல விஷயங்கள் செய்கின்றனர். ஆனால் ஒரு சிலர் சின்னதாக ஒரு பொருள் வாங்குவதாக இருந்தாலும் அதை ஜோதிட சாஸ்திரத்தின்படியும் ஆன்மீக சாஸ்திரத்தின்படியும் ஆராய்ந்து செயல்படுவார்கள். அந்த வகையில் ஆன்மீக படி செய்யக்கூடாத ஒரு சில குறிப்புகளை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.

ஆன்மீக படி உங்கள் வீட்டில் இருந்து ஆடை, ஆபரணங்கள், பொன் மற்றும் பொருள் முதலியவற்றை புதன்கிழமை அன்று யாருக்கும் கொடுக்கக் கூடாது. மீறி கொடுத்தால் உங்கள் வீட்டில் இருக்கும் மகாலட்சுமி அடுத்தவரிடம் சென்று விடுவாள் என்று சாஸ்திரத்தில் கூறப்படுகிறது.

வீட்டில் யாராவது தூங்கிக் கொண்டிருக்கும்போது ஒருபோதும் பூஜை அறையில் விளக்கு ஏற்றாதீர்கள். தூங்குபவர்கள் எழுந்த பிறகு தான் பூஜை அறையில் விளக்கு ஏற்ற வேண்டும்.

மாவிலை கட்டுவதால் பல தோஷங்கள் நீங்கும். ஆனால் இன்றைய காலகட்டத்தில் மாவிலை ஒரு சில நகரங்களில் எளிதாக கிடைக்காத காரணத்தினால் பிளாஸ்டிக் மற்றும் பித்தளை ஆகியவற்றலான மாயிலை தோரணம் கட்டுகின்றனர். ஆனால் பிளாஸ்டிக் மற்றும் பித்தளை ஆகியவற்றால் என மாவிலை தோரணம் கட்டக்கூடாது.

வீட்டில் சுப்ரபாதத்தை தினமும் காலை வேளையில் மட்டுமே கேட்க வேண்டும். காலையில் கேட்க முடியவில்லை என்று மதிய நேரத்திலோ அல்லது மாலையில் கேட்பதோ அவ்வளவு உகந்தது அல்ல.

Read Previous

அதிர்ச்சி..!! சூட்கேஸில் பெண் சடலம்..!! போலீசார் விசாரணையில் திடீர் திருப்பம்..!!

Read Next

இளம்பெண்ணை ஆபாசமாக வீடியோ எடுத்து காதலிக்கும்படி மிரட்டல்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular