
ஆன்மீக சாஸ்திரத்தின் படி.. எந்த நாள், எந்த தவறு செய்தால், என்ன விளைவு தெரியுமா..??
ஆன்மீக சாஸ்திரத்தின் படி ஒரு சிலவற்றையெல்லாம் ஒரு சில தினங்களில் செய்யக்கூடாது மீறி செய்தால் என்ன விளைவு என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
ஞாயிற்றுக்கிழமை அன்று இரும்பு சார்ந்த பொருள் எதுவும் வாங்கக்கூடாது. மீறி வாங்கினால் வீட்டின் அமைதி கெடும் மற்றும் உறவு விலகும். திங்கட்கிழமை அன்று சாவு மற்றும் துக்கம் விசாரிக்கக் கூடாது. மீறி இதை செய்தால் இதனால் ஏற்படும் விளைவு சொல்ல உகந்ததல்ல. செவ்வாய்க்கிழமை அன்று பெண்கள் அணிந்துள்ள நகையை கழட்டுவதோ கழட்டி சுத்தம் செய்வதோ ஒரு பொழுதும் கூடாது. அப்படி செய்தால் வீட்டின் செல்வ வளம் மறைவதற்கான வாய்ப்புகள் அதிகம். புதன்கிழமை அன்று கண் சிகிச்சை செய்யக்கூடாது. மீறி செய்தால் பாதிப்பு அதிகரிக்கும். வியாழன் கிழமை அன்று பித்ரு நிந்தனை கூடாது. மீறி செய்தால் குலசபத்தை அது உண்டாக்கும். வெள்ளிக்கிழமை அன்று கண் திருஷ்டி சுத்தக்கூடாது. மீதி வெள்ளிக்கிழமை அன்று கண்திருஷ்டி சுத்தினால் வீட்டில் இருக்கும் மகாலட்சுமி விலகி செல்வாள். சனிக்கிழமை அன்று கடன் வாங்க கூடாது மீறி வாங்கினால் கடன் பெருகி தரித்தரத்தை உண்டாக்கும்.