
செங்கோட்டையிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் வழியாக திருப்பதிக்கு ஆண்டாள் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்..
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரம் தித்திக்கும் பால்கோவாவிற்கும் மட்டுமல்ல பக்தி மனம் கமலும் ஆண்டாள் கோயிலுக்கும் சிறப்பு பெற்றது, ஆண்டாள் அவதரித்த புண்ணிய பூமியின் ஸ்ரீவில்லிபுத்தூருக்கும் திருவேங்கடம் உடையான் சீனிவாச பெருமாள் இருக்கும் திருப்பதிக்கும் மிக நெருங்கிய தொடர்புகள் உண்டு, ஆன்மீக நகரமான ஸ்ரீவில்லிபுத்தூருக்கு குறிப்பாக ஹைதராபாத் கீழ் திருப்பதி என ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும், ஆண்டாள் கோயில் திருவிழா என்றால் ஆந்திரா தெலுங்கானா மாநிலங்களில் இருந்து 100 முதல் 200 பேர் வரை பல்வேறு குழுக்களாக ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வந்து 3 முதல் 10 நாட்கள் தங்கி நிகழ்ச்சிகளை பார்த்துவிட்டு செல்வார்கள், அதே போல் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் வசிக்கும் மக்கள் திருப்பதிக்கு அடிக்கடி சென்று வர முடி காணிக்கை செலுத்த, பெருமாளை தரிசனம் செய்வது வழக்கம் இவர்கள் திருப்பதி செல்ல நேரடி ரயில் வசதி இல்லை மதுரை சென்று அங்கிருந்து சென்னை சென்று அங்கிருந்து மாற்று ரயில் மூலம் திருப்பதிக்கு செல்ல வேண்டி உள்ளது, ஸ்ரீவில்லிபுத்தூர் வழியாக பொதிகை எக்ஸ்பிரஸ் செங்கோட்டை மதுரை பயணிகள், மதுரை குருவாயூர் எக்ஸ்பிரஸ் சிலம்பு எக்ஸ்பிரஸ் பொச்சுவேலி தாம்பரம், கொல்லம் ரயில் மேட்டுப்பாளையம் செங்கோட்டை என வாரத்திற்கு சுமார் 18 ரயில்கள் இயக்கப்படுகின்றன ஸ்ரீவில்லிபுத்தூர் மார்க்கமாக இத்தனை ரயில்கள் இயக்கப்பட்டாலும் முக்கிய ஆன்மீக நகரமான திருப்பதிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் மார்க்கமாக எந்த ரயிலும் இயக்கப்படுவது இல்லை, எனவே நேரடியாக செங்கோட்டையில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் மார்க்கமாக திருப்பதிக்கு ஆண்டாள் எக்ஸ்பிரஸ் ரயில் இயங்க வேண்டும் என கோரிக்கை எழந்துள்ளது, இதற்கிடையே சிவகாசி எம்எல்ஏ அசோகன் கடந்த சில தினங்களுக்கு முன்பு தென்னக ரயில்வே மண்டல மேலாளர் சரத் ஸ்ரீ வஸ்தாவை நேரில் சந்தித்து திருப்பதிக்கு பக்தர்கள் எளிதாக சென்று திரும்பும் வகையில் ஆண்டாள் எக்ஸ்பிரஸ் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..!!