ஆன்லைனில் மணமகள் தேடி இன்ஜினியர்..!! ஆசை வார்த்தை கூறி ரூ.23 லட்சம் பணத்தை சுருட்டிய கில்லாடிப் பெண்..!!

கோவை மாவட்டம், சிங்காநல்லூர் கிருஷ்ணா காலணியை சார்ந்தவர் இன்ஜினியர் கோகுலகிருஷ்ணன். தொழிலதிபரான இவர் ஏற்கனவே திருமணம் ஆன மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்றுள்ளார். பின்னர் மறுமணம் செய்வதைகாக ஆன்லைன் திருமண தகவல் மையத்தை தொடர்பு கொண்டு உள்ளார்.

அதில் அழகான தோற்றத்துடன் கூடிய ஒரு பெண் கோகுல கிருஷ்ணனை தொடர்பு கொண்டு தனது பெயர் ரதிமீனா என்று அறிமுகம் செய்து கொண்டு தானும் திருமணம் செய்ய மாப்பிள்ளை தேடி வருவதாக கூறியுள்ளார். இதனை தொடர்ந்து இருவரும் நட்பாக பழக தொடங்கினர். இந்த வாய்ப்பை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அந்த பெண், தான் ஒரு ஆன்லைன் செயலியை அனுப்புவதாகவும் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டலாம் என்றும் கோகுல கிருஷ்ணனிடம் ஆசை வார்த்தைகளை கூறியுள்ளார்.

இதனை உண்மை என நம்பிய கோகுலகிருஷ்ணன் அந்த பெண் கூறிய வங்கி கணக்கிற்கு ரூ.23 லட்சம் பணத்தை ஆன்லைன் மூலம் அனுப்பி வைத்தார். ஆனால் அதன் பின் அந்த பெண் கோகுல கிருஷ்ணனை தொடர்பு கொள்ளவில்லை. பணத்தையும் திரும்ப பெற முடியவில்லை. அப்போதுதான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த இன்ஜினியர் கோகுலகிருஷ்ணன். சம்பவம் தொடர்பாக கோவை சைபர் கிரைம் காவல்துறையில் புகார் அளித்தார். அதன்படி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து பணத்தை சுருட்டி சென்ற இளம் பெண்ணை தேடி வருகின்றனர்.

Read Previous

தமிழகத்தில் பள்ளிகள் எப்பொழுது திறக்கப்படும்..? வெளியான முக்கிய அறிவிப்பு..!!

Read Next

அரசு மருத்துவமனைகளில் மூன்று ஷீப்ட்..!! தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular