
ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த தம்பதி தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் நடந்துள்ளது. இந்தச் சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
நேற்று பிப்ரவரி 18 அன்று மைசூரில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த தம்பதி ஜோபி ஆண்டனி மற்றும் ஷர்மிளா தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இவர்களின் தற்கொலைக்கு முந்தைய நாள் தான் ஜோதியின் சகோதரர் ஜோஷி தற்கொலை செய்து கொண்டுள்ளார் என தெரிய வந்துள்ளது. ஜோஷி தற்கொலை செய்து கொள்ளம் முன் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில் ஜோபி ரூ 80 லட்சம் கடன் வாங்கியதாகவும் கடன் கொடுத்தவர்கள் தன்னையும் மிரட்டியதாகவும் அந்த வீடியோவில் பதிவு செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை அடுத்து இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.