
பரிசு பொருட்கள் அனுப்புவதாக கூறிய மோசடியால் சென்னையில் 20 வயது இளம்பெண் ஒருவர் நேற்று தற்கொலை செய்துகொண்டார். ஆன்லைன் மூலம் அறிமுகமான மர்ம நபர் வெளிநாட்டில் வேலை செய்வதாக கூறி அந்த பெண்ணுக்கு 15,000 அமெரிக்கா டாலர் பரிசாக அனுப்பி இருப்பதாக கூறியுள்ளார். சுங்கத்துறை அலுவலகத்தில் அந்த பார்சல் இருப்பதாகவும் பணம் செலுத்தினால் அந்த பார்சல் வீட்டுக்கு வரும் என ஆசை வார்த்தை கூறியுள்ளார். 45,000 ரூபாய் பணம் செலுத்தாவிட்டால் சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விடுவார்கள் என அந்த நபர் இளம்பெண்ணை மிரட்டியுள்ளார். இதனையடுத்து பயத்தில் இளம்பெண் அஸ்வினி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.