
அனைத்து வகையான ஆன்லைன் மோசடிக்கும் 1930 என்ற இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் – அருப்புக்கோட்டை நகர் காவல் துறையினர் விழிப்புணர்வு.
ஜுலை 30
வங்கிக்கணக்கில் பணம் திருடப்படுதல், ஆன்லைன் மோசடி என தமிழகத்தில் தற்போது சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் அனைத்து வகையான ஆன்லைன் பண மோசடிக்கும் 1930 என்ற இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டும் cybercrime. gov. in என்ற இணையதளம் வாயிலாகவும் புகார் அளிக்கலாம் என அருப்புக்கோட்டை நகர் காவல் துறையினர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்.