ஆன்லைன் பந்தயத்தில் முதலீடு செய்து, ரூ.2 கோடி கடனாளியான மகன் அடித்தே கொலை..!! தந்தை அதிர்ச்சி செயல்.!!

இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் விரைந்து பணக்காரராக ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் தங்களுக்கு தெரிந்த வழிகளில் முதலீடு செய்து பணத்தை இழந்து வருகின்றனர். இதனால் கடனாளியாகி கடன் கொடுத்தவருக்கு பதில் சொல்ல இயலாமல் தற்கொலை போன்ற விஷயங்களையும் செய்து வருகின்றனர்.

தெலுங்கானா   மாநிலத்தில் உள்ள மேடக் மாவட்டம் பாகிராபத் பகுதியில் வசித்து வருபவர் சத்யநாராயணா. இவரின் மகன் முகேஷ் குமார் (வயது 28)  இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாகவே சரி வர வேலைக்கு செல்லாத முகேஷ் குமார் எப்பொழுதும் ஆன்லைனில் பணம் கட்டி, பந்தய விளையாட்டுகளை விளையாடி வந்தார். இந்த விவகாரம் முகேஷ் இன் தந்தை சத்யநாராயணாவுக்கு தெரிய வந்துள்ளது. உடனே  சத்தியநாராயணன் மகனை கண்டித்துள்ளார் ஆனால் எந்த ஒரு பலனும் இல்லை.

இதனால் மொத்தமாக ரூ. 2 கோடி கடனாளியாகிய முகேஷ் உருவெடுக்க  சொந்த ஊரில் இருந்த நிலம் மற்றும் வீடு ஆகிய அனைத்தையும் விற்பனை செய்து வந்த பணத்தில் கடன் அடைக்கப்பட்டுள்ளது. எஞ்சிய தொகையை அவர்கள் அடைக்க வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டது. இந்நிலையில் சம்பவத்தினத்தன்று  வீட்டில் தந்தையின் அறிவுரையை கேட்காமல் தொடர்ந்து ஆன்லைனில் பந்தயம் கட்டி விளையாட தொடங்கியுள்ளார் முகேஷ் குமார்.  இதனால் ஆத்திரமடைந்த தந்தை முகேஷ் குமாரை அடித்து அவரை கொலை செய்துள்ளார். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக மரத்துவமணைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் சத்திய நாராயணனை கைது செய்துள்ளனர்.

Read Previous

ஐஎஸ் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 18 இந்திய பெண்கள் மீட்பு? வைரல் வீடியோவின் உண்மை என்ன?

Read Next

வளர்ப்பு மகளை 6 மாதமாக மிரட்டி சீரழித்த தந்தை..!! கைம்பெண்ணுக்கு வாழ்க்கை கொடுத்து நடந்த பயங்கரம்.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular