ஆன்லைன் மூலம் மருந்து விற்பனை செய்வது குறித்து மத்திய அரசு உடனடியாக கொள்கையை வெளியிடும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மத்திய அரசு வகுத்துள்ள வரைவு விதிகளுக்கு ஒப்புதல் பெற்று வெளியிடும் வரை ஆன்லைன் மூலம் மருந்துகளை விற்பனை செய்ய எதிர்ப்பு தெரிவித்து தமிழக கெமிக்கல் லிஸ்ட் மற்றும் மருந்து விற்பனையாளர்கள் சங்கம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தது. இந்த வழக்கினை விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம் பொதுமக்களின் நலன்களை கருத்தில் கருதி ஆன்லைனில் மருந்து விற்பனை தொடர்பாக வகுத்துள்ள விதிமுறையை விரைந்து கெஜட்டில் இருந்து வெளியிடவும் அதுவரை ஆன்லைனில் மது விற்பனை செய்யக்கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. டெல்லி உயர்நீதிமன்றம் விசாரிப்பதாலும், புதிய கொள்கையை இறுதி செய்யும் பணியில் மத்திய அரசு இருப்பதாலும், மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்கின்றோம். புதிய கொள்கையை விரைந்து இறுதி செய்து வெளியிடும்படி மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மருந்து நிறுவனங்கள் ஆன்லைன் வாயிலாக மட்டுமே மருந்துகளை விற்பனை மேற்கொள்ள முடியும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறினால் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.




