சென்னை மாதவரம் ஆட்டுச்சந்தை பகுதியில் போலீசார் நடத்திய என்கவுன்டரில் ரவுடி திருவேங்கடம் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
கடந்த 5ஆம் தேதி பெரம்பூரில் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்க் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டவர் ரவுடி திருவேங்கடம். இந்த வழக்கில் போலீசார் மொத்தம் 11 பேரை கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் போலீசார் அவர்கள் அனைவரையும் தனித்தனியே அழைத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது விசாரணைக்காக ரவுடி திருவேங்கடம் அழைத்து சென்றபோது தப்பிக்க முயன்றதாக போலீசார் திருவேங்கடத்தினை என்கவுன்டர் செய்துள்ளனர். மேலும் இது தொடர்பாக சென்னை வடக்கு கூடுதல் காவல் ஆணையர் நரேந்திரன் நாயர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகிறார். ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ஆம் தேதி பெரம்பூரில் படுகொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.