36 வயது நடிகைக்கு மார்பக புற்றுநோய் இருப்பதாகவும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் சமூக வலைதளத்தில் வதந்திகள் பரவிய நிலையில் அந்த நடிகை ’ஆம் எனக்கு மார்பக புற்றுநோய் இருப்பது உண்மைதான், ஆனால் அதே நேரத்தில் நான் அந்த நோயை எதிர்த்து போராடி வருகிறேன்’ என்று தனது இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
பாலிவுட் திரையுலகின் நடிகைகளில் ஒருவர் ஹினா கான் என்பதும், இவர் சில திரைப்படங்கள் மற்றும் குறும்படங்களில் நடித்துள்ளார் என்பதும் ஒரு சில திரைப்படங்களை தயாரித்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் சில தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்துள்ள ஹினாகான், பிக் பாஸ் இந்தி 11வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார்.
இந்த நிலையில் நடிகை ஹினா கான் சமீபத்தில் மார்பக புற்று நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் அவரது உடல்நிலை ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் செய்திகள் வெளியான நிலையில் தற்போது அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு மார்பக புற்றுநோய் இருப்பது உண்மைதான் என கூறியுள்ளார்.
ஆனால் அதே நேரத்தில் தான் நலமாக இருப்பதாகவும், நோயை எதிர்த்து போராடி வருவதாகவும், சீக்கிரம் முழுமையாக சிகிச்சை முடிந்து ரசிகர்களை மகிழ்விக்க தொடந்து நடிப்பேன் என்றும் எனக்காக ரசிகர்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாகவும் கூறியுள்ளார். மேலும் மார்பக புற்றுநோய் இருந்தாலும் நான் துவண்டு விடவில்லை தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறேன் என்றும் கூறியுள்ளதை அடுத்து ஹினா கான் விரைவில் குணமாக வேண்டும் என்று ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க