ஆம்.. நீ சொல்வதே சரி..!! அருமையான குட்டி கதை..!! படித்ததில் மிகவும் பிடித்தது..!!

தினம் ஒரு குட்டிக்கதை –

ஆம்.. நீ சொல்வதே சரி!

உத்தியோக உயர்வு, ஊதிய உயர்வு இரண்டும் கிடைத்த குதூகலத்தில் அலுவலகத்திலிருந்து இனிப்புடன் வீட்டிற்கு வந்த அண்ணாமலையோ,

கட்டிப்பிடித்தார் மனைவியை …

கன்னத்தில் முத்தமிட்டார் தம் பிள்ளைகளை .

 

இனிப்பை அவர்கள் வாயில் ஊட்டி விட்டு மகிழ்வுடன்

“இது நாம் கொண்டாடி மகிழ வேண்டிய நேரம் ” என்றார்

“கேளுங்கள் உங்கள் ஆசைகளை .

கேட்கும் இடங்களுக்கு அழைத்துச் செல்வேன்”என்று வாக்குறுதிகளை அள்ளி வீசினார்.

 

மனைவியோ “கோவிலுக்கு சென்று சிறப்பு வழிபாடு செய்வோம். பின்னர் துணி கடைக்கு சென்று புத்தம் புது ஆடைகளை பிள்ளைகளுக்கு வாங்கி வருவோம் அதுவே என் விருப்பம் ” என்றாள்

“அப்படி என்றால் உனக்கு எதுவுமே வேண்டாமோ?” என கிண்டலாக கேட்டு சிரித்தான் கணவன்.

“அட போங்க! அதை நான் கேட்டு தான் நீங்கள் வாங்கி தர வேண்டுமா? முதலில் இந்த உயர்வை தந்த அந்த ஆண்டவனின் சந்நிதிக்கு செல்வோம். எல்லோரும் கிளம்புங்கள்” என்றாள்

 

“ஆம்! நீ சொல்வதே சரி !”என்றார் அண்ணாமலை

 

மூத்த மகன் கவியரசன் தன் தந்தையின் தோளில் தோழனாய் கைப் போட்டு “அப்பா!நட்சத்திர விடுதியில் அறை எடுத்து நாம் தங்குவதே என் விருப்பம் .அங்கே நீங்கள் எங்களுக்கு பலத்த விருந்தளியுங்கள். அதை நீங்கள் செய்வீர்களா ?. உங்களால் முடியுமா?” என்று குழப்பத்துடன் கேட்டான்

 

“நிச்சயமாக செய்கிறேன்

ஆம்! நீ சொல்வதே சரி !”என்றார்

அண்ணாமலை

 

திருமணமாகாத தங்கை ஒருத்தியோ அவரிடம் “அண்ணா ! அனாதை ஆசிரமம் சென்று அன்னதானம் செய்வோம். அதுவே உங்களுக்கு தரும் மனநிறைவு” என்றாள்

 

“நல்ல யோசனை .. ஆம்! நீ சொல்வதே சரி! ” என்றார் அண்ணாமலை

 

இளைய மகன் சாரதியோ தந்தையின் கழுத்தை கட்டிக்கொண்டு ’”என்னுடைய விருப்பமோ கேளிக்கை பூங்கா, கடற்கரை, வணிக வளாகம். திரைப்படம் என ஊரையே சுற்றிச் சுற்றி வருவோம் அப்பா ! அது தரும் மகிழ்ச்சியோ பெரிது!” என்றான்

 

“ஆம்! நீ சொல்வதும் சரி !” என்றார்

அண்ணாமலை..

 

அதுவரை அங்கே அமைதி காத்த அண்ணாமலையின் அன்பு மகள் பத்மாவை கண்ட அவரோ, “அடியே என் செல்லமே! உன் அப்பனுடைய வளர்ச்சியை கண்டு நீ மலைத்து போனாயோ? ஏனடா கண்ணே! உனக்கு எங்கும் சிறகடித்து பறக்க ஆசை இல்லையோ ? எங்கே செல்வோம் ? நீயே சொல்! .. அங்கேயே செல்வோம்.. உன் விருப்பமே என் விருப்பம்” என்றார்.

 

அந்த பத்து வயது சிறுமி பத்மாவோ தன் தந்தையை பார்த்து “அப்பா! நான் சொல்லும் இடம் உங்களுக்கு பிடிக்குமோ பிடிக்காதோ ? அவர்கள் சொல்வதை எல்லாம் மகிழ்ச்சியுடன் உங்களால் செய்து முடிக்க இயலும் ஆனால் நான் சொல்வதை உங்கள் மனம் ஏற்றுக் கொள்ளுமா என்பது எனக்குத் தெரியாது.ஆனால் உழவு தொழில் செய்து, உங்களை இந்த நிலைமைக்கு படிக்க வைத்து ஆளாக்கி, உயர்ந்த வாழ்வை கொடுத்த உங்கள் அப்பா அம்மாவை அதான் என் தாத்தா பாட்டியை கிராமத்திற்கு சென்று பார்த்து, அந்த முதியவர்களின் காலை தொட்டு வணங்கி, இந்த மகிழ்ச்சியான செய்தியை அவர்களிடம் சொல்லி, ஆசீர்வாதம் பெற வேண்டும் என்பதே என் ஆசை செல்வோமா? இதுதான் நீங்கள் செய்ய வேண்டிய முதல் கடமையென நான் நினைக்கிறேன். அதை நிறைவேற்ற உங்களால் முடியுமா? ” என்று ஆதங்கத்துடன் கேட்டு விட்டு பத்மா தந்தையின் முகத்தை கேள்விக்குறியுடன் ஏறிட்டு பார்த்தாள்.

 

மகளின் இந்த பேச்சு அவரை யாரோ சாட்டையை கொண்டு அடிப்பது போல் அவரை எதையோ உணர வைத்தது .. உன்னை பெற்றவரையே மறந்தாயோ பாவி ? என்பது போல் .

 

அண்ணாமலை ஒடி வந்து மகளைக் கட்டி அணைத்தபடி ” நீ சொல்வது போல் நாம் செல்ல வேண்டிய இடம் முதலில் அதுவே தான் . சரியான நேரத்தில் நான் என்ன செய்ய வேண்டும் என்பதை எனக்கு தெரிய வைத்த, இல்லையில்லை… தெளிய வைத்த உனக்கு நன்றி மகளே” என்று மனம் நெகிழ்ந்து கூறியே கண் கலங்கினார்.

 

ஆம்! பத்மா சொல்வதே சரி !கிளம்புங்கள் நம் கிராமத்திற்கு! என்று கூறி புறப்பட தயாரானார்

அண்ணாமலை.

Read Previous

திருமணத்திற்கு தயாரான மகனுக்கு தந்தையின் அறிவுரை..!! அருமையான பதிவு..!! படித்ததில் பிடித்தது..!!

Read Next

ஆண்களே உங்கள் மனைவியின் கையை பிடித்து பாருங்கள் எத்தனை கீறல்கள் காயங்கள் இருக்கும் என..!! படித்ததில் பிடித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular