
ஆயுத பூஜை பிறந்த கதை மகாபாரத காவியத்தில் ஆயுத பூஜையின் முக்கியத்துவம் சொல்லப்பட்டிருக்கிறது. கௌரவர்களுடனான சூதாட்டத்தில் தோல்வியை தழுவிய பாண்டவர்கள் தங்களுடைய நாடு உடமைகளை இழந்து வனவாசம் செல்ல நேர்ந்தது. கடைசி ஒரு வருடம் அஞ்ஞாத வாசம் மேற்கொள்ள வேண்டும். அதாவது யாரும் அறிந்து கொள்ளாத படி எவர் கண்ணிலும் படாமல் வாழ வேண்டும். இல்லையென்றால் மீண்டும் வனவாசத்தை மேற்கொள்ளும் நிலை ஏற்பட்டுவிடும். எனவே பாண்டவர்கள் அனைவரும் தங்களுடைய ஆயுதங்களை ஒரு மறைவான இடத்தில் வைத்துவிட்டு மாறுபட்ட தோற்றத்தில் வேறு வேறு இடத்தில் தங்கி இருக்க நினைத்தனர் .அதன்படி அவர்கள் அனைவரும் ஒரு வன்னி மரத்தின் அடியில் தங்களுடைய ஆயுதங்களை பதுக்கி வைத்து வட்டு ஆளுக்கு ஒரு திசையில் சென்றனர் .ஓராண்டு அஞ்ஞாத வாசம் முடிந்த பிறகு மீண்டும் அவர்கள் வன்னி மரத்தின் கீழ் வந்து கூடினர். அவர்களின் ஆயுதங்கள் அங்கேயே பாதுகாப்பாக இருந்தது. பாண்டவர்கள் அனைவரும் 9 நாட்கள் விரதம் மேற்கொண்டு ஆயுதங்களுக்கு பூஜை செய்து அதன் பிறகு அதை எடுத்து பயன்படுத்த தொடங்கினார். அன்றைய தினமே ஆயுத பூஜை என்றும் அஸ்திர பூஜை என்றும் அழைக்கப்படுகிறது.