பொதுவாக கீரை என்றாலே பெரியவர்களில் இருந்து சிறியவர்கள் வரை அனைவரும் முகம் சுளிப்பார்கள். ஆனால் , அந்தக் கீரையில் தான் அதிகமான சத்துக்கள் கொட்டி கிடைக்கின்றது. நம் அன்றாட உணவு முறையில் கீரை சேர்த்துக் கொள்வது என்பது உடலுக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும். கீரை என்பது உடலுக்கு அதிகமான ஊட்டச்சத்துக்களை கொடுக்கிறது. அதிலும் குறிப்பாக அரைக்கீரை ஊட்டச்சத்துக்களின் களஞ்சியமாக உள்ளது. அரைக்கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி தற்போது பார்க்கலாம்.
அரைக்கீரை சாப்பிடுவதால் இதயம் ஆரோக்கியமாக செயல்படுகிறது. அதற்கு காரணம் அரைக்கீரையில் உள்ள பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை சீராக வைத்துள்ளது. இதனால் இதயம் ஆரோக்கியமாக செயல்படுகிறது. மேலும் அரைக்கீரையில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை சீராக்கி மலச்சிக்கல் போன்றவற்றை போக்குகிறது. எலும்புகளை வலுவாகிறது. மேலும் எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள் வருவதை தடுக்கிறது. அரைக்கீரையில் அதிகபட்சமான நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறது மற்றும் வைட்டமின்கள் ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் நோ ய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும். பெரியவர்களில் இருந்து சிறியவர்கள் வரை காய்ச்சல் சளி மற்றும் இருமல் போன்ற நோய் தொற்றுகளை ஏற்படாமல் தடுக்கும். அரைக்கீரையில் உள்ள வைட்டமின் ஏ கண் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கிய பங்கு வருகிறது. இதுபோன்ற பல ஆரோக்கிய ரீதியான பலன்கள் நாம் அரைக்கீரை சாப்பிடுவதால் உள்ளது. நம் அனைவரும் அன்றாட உணவில் கீரை சாப்பிடுவது என்பது ஒரு முக்கியமான ஒன்றாகும்.




