
ஆரஞ்சு பழ தோலில் உள்ள அழகு ரகசியம்..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!
ஆரஞ்சு பழம் இந்த பழத்தில் எக்கச்சக்கமான ஆரோக்கிய நன்மைகள் ஒளிந்து இருக்கிறது என்பது நம்மில் பலருக்கும் தெரியும். மற்றும் ஆரஞ்சு பழம் என்றால் குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். ஆரஞ்சு பழமாகவும் சாப்பிடலாம் ஒரு சிலருக்கு ஜூஸாக குடித்தால் தான் பிடிக்கும். இவ்வாறு ஆரஞ்சு பழத்தை பற்றி இவ்வளவு பேசுகிறோம் ஆனால் ஆரஞ்சு பழ தோலை பற்றி நாம் யாரும் கண்டுக்கவே இல்லை ஆனால் அதில் தான் எக்கச்சக்கமான ஆரோக்கிய நன்மைகள் ஒளிந்து இருக்கிறது. அது என்ன என்பது பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
ஆரஞ்சு பழ தோலை காய வைத்து அரைத்து அதனுடன் சிறிதளவு பயத்த மாவு சிறிது பன்னீர் சேர்த்து முகத்தில் மாஸ்க் போட்டு 20 நிமிடங்கள் கழித்து கழுவி வர முகச்சுருக்கம் மற்றும் கரும்புள்ளிகள் மற்றும் தேமல் மறைந்து முகம் பிரகாசமாக ஜொலிக்கும். ஆரஞ்சுபழ தோலை நன்றாக காய வைத்து சீயக்காயுடன் சேர்த்து அரைத்து பயன்படுத்துவதன் மூலம் தலையில் உள்ள பேன் மற்றும் பொடுகு தொல்லை நீங்கும்.