
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் பா. ம. க. கட்சியின் 35-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு ஆரணி ஆற்காடு சாலையில் அரசு போக்குவரத்து பணிமனை முன்பு கட்சியின் தொழிற்சங்க கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது. மேலும் ஆரணி பழைய பஸ் நிலையம் எம். ஜி. ஆர். சிலை அருகில் கட்சி கொடியை மாவட்ட செயலாளர் ஆ. வேலாயுதம் ஏற்றினார். நிகழ்ச்சியில் வன்னியர் சங்க மாவட்ட செய லாளர் அ. கருணாகரன், மாவட்ட துணை செயலாளர் வடிவேல், தொகுதி அமைப்பு செயலாளர் அ. க. ராஜேந்திரன், அரியப்பாடி பிச்சாண்டி, ஆதனூர் மெய்யழகன், நகர செயலாளர்கள் சதீஷ், ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர் சுதாகர், தொழிற்சங்க நிர்வாகிகள் சதாசிவம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.