
உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க ஒவ்வொரு வயதினரும் தினசரி எவ்வளவு நேரம் தூங்க வேண்டும். அமெரிக்க நோய் தடுப்பு மையம் கொடுக்கப்பட்டுள்ள பட்டியலை இங்கு தெரிந்து கொள்வோம்.
தூக்கம்
உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க தினசரி முறையான உடற்பயிற்சி, உணவுகளுடன் சரியான தூக்கமும் அவசியமானதாக இருக்கிறது.
சரியான தூக்கமின்மை மன அழுத்தம், இரத்த அழுத்தம் போன்றவை ஏற்பட்டு மாரடைப்பு அபாயங்கள் வரை ஏற்படுத்தலாம்.
தினசரி வாழ்வில் ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் தூங்க வேண்டும் என்பது அவரவர் வயதுக்கு ஏற்ப மாறுபடும். அந்த வகையில் ஆய்வு ஒன்றினை நடத்திய அமெரிக்க நோய் தடுப்பு மையம் பட்டியல் ஒன்றினை வெளியிட்டுள்ளது.
இதில் எந்தெந்த வயதினர் எவ்வளவு நேரம் தூங்கினால் ஆரோக்கியமாக உடலை வைத்துக் கொள்ள முடியும் என்பதை வெளியிட்டுள்ளது.
எந்த வயதினருக்கு எவ்வளவு நேரம்?
பிறந்த குழந்தைகள் முதல் 3 மாத குழந்தைகள் தினசரி 14 முதல் 17 மணி வரை தூங்க வேண்டும்.
4 மாதம் முதல் 12 மாதம் வரையிலான குழந்தைகள் 12 முதல் 16 மணி நேரம் தூங்க வேண்டும்.
1 வயது முதல் 2 வயது வரை குழந்தைகள் 11 முதல் 14 மணி நேரம் வரை தூங்க வேண்டும்.
3 – 5 வயதுடைய குழந்தைகள் 10 – 13 மணி நேரம் தூங்க வேண்டும்.
6 -12 வயது சிறுவர்\சிறுமியர் 9 – 12 மணி நேரம் தூங்க வேண்டும்.
13 – 17 வயதுக்கு உட்பட்டோர் தினசரி 8 – 10 மணி நேரம் வரை தூங்கலாம்.
18 முதல் 60 வயது வரை தினசரி 7 – 8 மணி நேரம் தூங்கலாம்.
61 – 64 வயதுக்குட்பட்டோர் தினசரி 7 – 9 மணி நேரம் தூங்க வேண்டும்.
65 வயதிற்கு மேற்பட்டவர்கள் 7 – 8 மணி நேரம் வரை தூங்கலாம்.
இவ்வாறு தூங்குவதால் அந்தந்த வயதிற்கேற்ப உடல் நிலையை ஆரோக்கியமாக வைத்திருக்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக குறித்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.