
ஆரோக்கியமான உணவுப் பழக்கம் என்றால் என்ன தெரியுமா..??
ஆரோக்கியமான உணவு பழக்கம் என்றால் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது மட்டுமல்ல. ஆரோக்கியமான உணவுப் பழக்கம் என்றால் நாம் உணவை எப்படி எந்த நேரத்தில் சாப்பிடுகிறோம் என்பதும் கூட ஆரோக்கியமான உணவுப் பழக்கம் தான். இந்நிலையில் குளித்தபின் 45 நிமிடம் வரை உணவு சாப்பிடக்கூடாது. மற்றும் சாப்பிட்ட உடன் தூங்கக் கூடாது. மற்றும் சாப்பிட்ட பிறகு 3 மணி நேரம் கழித்து தான் குளிக்க வேண்டும்.
அளவு சாப்பாட்டை தவிர்த்து, அதிகமாக சாப்பிடுவதை தவிர்த்தும் தன் பசிக்கு சாப்பிட வேண்டும் ஏப்பம் வந்தவுடன் சாப்பாடு சாப்பிடுவதை நிறுத்திக் கொள்ளலாம். தண்ணீர் அதிகமாக அருந்த வேண்டும். ஆனால் நாம் குடிக்கும் தண்ணீர் சுத்தமாக இருக்கிறதா என்பதில் கவனம் இருக்க வேண்டும். தண்ணீரைக் கொதிக்க வைத்தோ வடிகட்டியோ ஒருபோதும் குடிக்க கூடாது. தண்ணீரை மண்பானையில் ஊற்றி வைத்து குடிக்கலாம். ஆனால் ஃப்ரிட்ஜில் வைத்து குடிக்கக்கூடாது. பசி வந்தால் தான் சாப்பிட வேண்டும். தாகம் வந்தால்தான் தண்ணீர் அருந்த சோர்வாக இருந்தால்தான் ஓய்வு எடுக்க வேண்டும். தூக்கம் வந்தால் தான் தூங்க வேண்டும்.
அதுமட்டுமின்றி இரவில் தூங்குவதற்கு முன் நேர்மறையான எண்ணங்களை மனதில் செலுத்த வேண்டும் மனதில் நினைக்க வேண்டும். எதிர்மறையான எண்ணங்களை நினைக்கக் கூடாது. இவ்வாறு பாசிட்டிவ் எண்ணங்களை நினைப்பதன் மூலம் இரவில் நிம்மதியான தூக்கத்தை பெறலாம்.