நாம் சாப்பிடும் உணவுகளில் ஒரு சில உணவு வகைகள் நமது வாய் வலி ஆரோக்கியத்தை பேணி பாதுகாக்க உதவுகிறது அந்த உணவுகளை நமது அன்றாட உணவில் எடுத்துக் கொள்வதன் மூலம் நமது பருக்கள் மற்றும் ஈறுகளுமே ஆரோக்கியமாக இருக்கும்..
நமது தினசரி உணவில் அதிக அளவு பலன்கள் மற்றும் காய்கறிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும் இதில் இருக்கும் வைட்டமின்கள் தாதுக்கள் நார்ச்சத்து உள்ளிட்டவை பற்கள் மற்றும் ஈறுகளுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும். சிலர் அது பற்கள் ஒரு சில காரணங்களால் மஞ்சள் நிறத்தில் காணப்படும் அதற்காக அவர்கள் பெரும் சிரத்தையை எடுப்பதுண்டு. ஆனால் அதற்கு மாற்றாக ஆப்பிள் பழத்தின் தினமும் கடித்து சாப்பிட்டு வரலாம் ஏனெனில் ஆப்பிளில் மாலிக் அமிலம் இருக்கிறது அது நமது பற்களை வெண்மையாக மாற்ற உதவுகிறது. பொதுவாகவே பற்கள் எலும்புகள் வலுப்பெற பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை நமது தினசரி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறுவார்கள் உண்மையில் அதில் இருக்கும் பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் பற்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கினை வகிக்கிறது. அதனால் உங்கள் பற்கள் மற்றும் ஈறுகள் எவ்வித கோளாறும் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று நீங்கள் எண்ணினால் தயிர் வெண்ணெய் நெய் மோர் பாலாடைகட்டி என்று ஏதேனும் ஒரு வகையில் இந்த பால் சார்ந்த பொருட்களை எடுத்துக் கொள்ளுங்கள். நாம் தினமும் சிறிதளவு நட்ஸ் வகைகளை உட்கொண்டு வந்தாலும் வாய்வழி ஆரோக்கியம் பராமரிக்கப்படும் என்று கூறப்படுகிறது. ஏனெனில் இந்த நற்சான்களில் பல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் பொட்டாசியம் நார்ச்சத்து வைட்டமின்கள் உள்ளிட்ட தாது பொருட்கள் நிறைந்து காணப்படுகிறது. உதாரணத்திற்கு பாதாம் பருப்புகளில் கால்சியம் மற்றும் மெக்னீசியத்தின் உள்ளடக்கம் அதிகம் இருக்கிறது இது இரண்டுமே வலுவான பற்களுக்கு மிகவும் அவசியம். அதேபோல் பற்களில் ஏற்படும் பிளேக் மற்றும் பாக்டீரியாக்களை நீக்கவும் இந்த பாதாம் உள்ளிட்ட நட் வகைகள் உதவும். நாம் குடிக்கும் தேநீரில் பற்களை வலுப்படுத்தவும் மற்றும் பற்களில் ஏற்படக்கூடிய துவாரங்களை ஏற்படாமல் தடுக்கவும் உதவும் ப்ளோரைடு இருக்கிறது. குறிப்பாக கிரீன் டீயில் இந்த பற்கள் வலிமை பெற உதவும் ப்ளோரைடு மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் உள்ளது. வாய்வழி ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் உமிழ்நீர் ஒரு முக்கிய பங்குனி வகிக்கிறது அதற்காகவும் நமது வாயில் இருக்கும் பாக்டீரியாக்கள் மற்றும் உணவு துகள்களை அகற்றவும் அதிகளவு தண்ணீர் குடிப்பது அவசியம் என்று பரிந்துரைக்கப்படுகிறது..!!