
வெற்றிலையும் முருங்கையும் தரும் நன்மைகளை நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும் வெற்றிலை போடுவதால் ஜீரண சக்தி பெருகும் முருங்கைக்கீரை சாப்பிடுவதால் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும் இவ்வளவுதான் நமக்கு தெரிந்தது இதை தாண்டியும் நிறைய உள்ளது பார்ப்போம்…
கொழுந்து வெற்றிலை மற்றும் மிளகு சாப்பிடுவதால் இரைப்பையில் ஏற்படும் அசிடிட்டி செரிமானம் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகள் குணமாகிவிடும் மெட்டபாலிசம் அதிகரித்து உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி உடல் முழுவதையும் சுத்தமாக்க உதவுகிறது, வெற்றிலைகளில் இரைப்பை குடல் வலி நீக்கி குணங்கள் அடங்கியுள்ளது அதேபோல் சரியான செரிமானத்திற்கும் உதவிடும் வெற்றிலையை வெல்வதால் மெட்டபாலிசம் அதிகரிப்பதோடு வயிற்றில் ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்கிறது, மஞ்சள் நிறத்தில் அல்லது அழுகிய நிலையில் உள்ள வெற்றியை தவிர்க்க வேண்டும் ஏனென்றால் அது வயிற்று போக்கை ஏற்படுத்தி விடும், அதேபோல் முருங்கையின் பலனை அவசியம் நம் தெரிந்து கொள்ள வேண்டும் : கண்பார்வை சீராகும், ரத்தம் சுத்தமாகும், அடிக்கடி முருங்கைக்கீரை சாப்பிடுவதன் மூலம் ஞாபக சக்தி அதிகரிக்கும், முடி உதிர்தல் சரியாகி முடி வளர்ச்சி அடையும், ஆஸ்துமா போன்ற பிரச்சனைகள் முருங்கை வகைகளை சாப்பிடும் பொழுது சரியாகிவிடும், சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் தன்மை முருங்கைக் கீரைக்கு உள்ளது மேலும் மேனி பளபளக்கும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை முருங்கை கீரைக்கு உள்ளது உடல் உஷ்ணத்தை தணிக்கும் தன்மை முருங்கை கீரைக்கு உள்ளது அஜீரணக் கோளாறுகள் நீங்கும் மேலும் மன அழுத்தத்தை சரி செய்யும் தன்மை முருங்கை கீரைக்கு முருங்கைப்பூ முருங்கை காய்க்கு உள்ளது எலும்புகளை வலுப்பெறும் தன்மை முருங்கைக்கு உள்ளது குழந்தையின்மை பிரச்சனைக்கு தீர்வாக இருப்பதற்கு முருங்கை சிறந்த மருந்தாக செயல்படுகிறது..!!