நடிகர்கள் ஆர்யா மற்றும் கவுதம் கார்த்திக் கூட்டணியில் பிரின்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘மிஸ்டர் எக்ஸ்’. விஷ்ணு விஷாலின் எப்.ஐ.ஆர் படத்தை இயக்கிய மனு ஆனந்த் இந்த படத்தை இயக்கி வருகிறார். ஆக்சன் திரில்லர் பாணியில் உருவாகி வரும் இந்த படத்தில் ஆர்யா கதாநாயகனாக நடிக்க முதல் முறையாக கவுதம் கார்த்திக் வில்லனாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது. சரத்குமார், மஞ்சு வாரியார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவதுமாக முடிவடைந்துள்ளது. கடைசி நாள் சூட்டிங்கில் படக்குழு கேக் வெட்டி கொண்டாடும் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. படத்தைக் குறித்த அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.