தற்பொழுது உள்ள காலகட்டத்தில் சமூக வலைத்தளம் என்பது மக்களிடம் இருந்து பிரிக்க முடியாத ஒன்றாகிவிட்டது. நமது அண்டை நாடான பாகிஸ்தானில் மக்கள் whatsapp, facebook, tiktok ,instagram, youtube, x ஆகிய பல்வேறு சமூக வலைதளங்களை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஜூலை 13ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை ஒரு வாரத்திற்கு வெறுப்பு பேச்சு உள்ளிட்டவற்றை தவிர்க்க பாகிஸ்தானில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
முகரம் பண்டிகை முன்னிட்டு ஜூலை 13ஆம் தேதி முதல் ஜூலை 18-ஆம் தேதி வரை பஞ்சாப் மாகாணத்தில் தடை விதிக்க வேண்டும் முதல்வர் மரியம் நவாஸின் சட்டம் கமிட்டி பரிந்துரை செய்துள்ளது .அதன்படி வெறுப்பு பேச்சு வன்முறை உள்ளிட்ட சம்பவங்களை தவிர்க்க இந்த நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாக பஞ்சாப் அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது.
பஞ்சாப் அரசு தலைமையிலான மத்திய அரசுக்கு இது தொடர்பான வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் பாகிஸ்தானில் தேர்தல் முடிவுகள் மாற்றப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் எக்ஸ் தளம் முடக்கப்பட்டது. ஏப்ரல் 22 இல் நம்பிக்கையிளான தீர்மானம் மூலம் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் வெளியேற்றப்பட்டதிலிருந்து ராணுவம் மற்றும் அரசாங்கம் சமூக ஊடகங்களில் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.