
விழுப்புரம் மாவட்டத்தில் ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த 39 ஜோடிகளுக்கு திருமணத்தை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று நடத்தி வைத்தார். இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழ்நாட்டின் ஒவ்வொரு பிரச்னைக்கும் பதில் சொல்ல ஆளுநர் ஒன்றும் அரசியல்வாதி அல்ல. ஆளுநர் செய்தியாளர்களை சந்திப்பது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிடும். ஆளுநர் பதவிக்கு மாண்பில்லாமல் போய்விடும். ஆளுநர் அரசியல் பேசக்கூடாது, இதில் நான் தெளிவாக இருக்கிறேன். கடைமையை செய்ய வேண்டும்” என தெரிவித்துள்ளார்.