
சென்னை டிநகரில் நடைபெற்ற புலவர் மா.நன்னன் நூற்றாண்டு விழா நடைபெற்றுள்ளது. இதில் கலந்துகொண்ட உரையாற்றிய தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் “2புலவர் மா நன்னன் நூற்றாண்டு நினைவு விழாவில் பங்கு ஏற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். மா நன்னன் எழுதிய 124 புத்தகங்கள் நாட்டுடைமையாக்கப்படும். பெரியார், கலைஞர், நன்னன் உள்ளிட்டோர் வாழ்நாள் முழுவதும் நாட்டிற்காகவும் மொழிக்காகவும் பாடுபட்டவர்கள்.
மா நன்னன் அப்பழுக்கற்றவர், நேர்மையாய் விளங்கியவர். அவரது பேச்சு ஆசிரியர் வகுப்பு நடத்துவது போல் இருக்கு.ம் எழுத்தால், சிந்தனையால் நன்னன் தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருப்பார். விழுப்புரத்தில் நடந்த இளைஞர் கூட்டத்தில் புலவர் நன்னனுக்கு மோதிரம் அணிவித்தேன். திராவிட கொள்கைகளை ஏற்றுக்கொண்ட அனைவரும் கலைஞரின் வழி தோன்றல்கள்தான். திராவிட கொள்கையை ஏற்றுள்ள அனைவரும் கலைஞரின் வழித்தோற்றல்கள்.
அடக்குமுறைக்கு வழித்தோன்றல் இருப்பதை போல விடுதலை இயக்கத்திற்கும் வழி தோன்றல்கள் இருப்பார்கள். ஆளுநர்ஆர்.என் ரவி தொடர்ந்து இங்கு இருக்க வேண்டும் அவர் இருந்தால் தான் நமது கொள்கையை நாம் வளர்க்க முடியும். பிரச்சாரத்தை நாம் சிறப்பாக இயலும். மேலும் இத்தகைய இந்தியாவிற்கு விரைவில் விடிவுகாலம் பிறக்கும்.
ஒன்றிய பாஜக அரசின் ஆட்டம் எல்லாம் இன்னும் சில மாதங்கள் தான். ஜனநாயகம், சமூகநீதி, மதப் பிரச்சினை, அரசியல் சட்டமென்று அனைத்தையும் அழிக்க முயற்சி செய்யும் பாஜக ஆட்சி முடியப்போகிறது. இந்தியாவிற்கு விடியல் பிறக்கப் போகிறது”, என்று கூறினார்.
இவ்விழா குறித்து ட்விட்டரில் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் மு க ஸ்டாலின் “தமிழ் தொண்டாற்றி நம்மிடையே நிறைந்துவிட்ட புலவர் மானமிகு மா நன்னன் அவர்களின் நூற்றாண்டு நிறைவிழாவில் நன்னன் குடியில் ஒருவனாக பங்கேற்று அவரது புத்தகங்களை நாட்டுடமையாக படும் என அறிவித்து பெருமை கொண்டேன். இனப்பற்றும், மொழிப்பற்றும் தமிழர்களிடையே உள்ளவரை நற்றமிழ் போல் நன்னன் புகழ் வாழும், நன்னன் குடி செழிக்கும்”, என பதிவிட்டுள்ளார்.