• September 24, 2023

ஆளுநர் ரவி பரபரப்பு குற்றச்சாட்டு..!!

பல்கலைக்கழக துணை வேந்தர்களின் பணியிடங்களை நிரப்புவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். சென்னையில் பல்கலைக்கழக நிர்வாகிகள் சந்திப்பில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி இவ்வாறு கூறியுள்ளார். மேலும் ஆளுநர் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், சிண்டிகேட், செனட் உள்ளிட்ட பல்கலைக்கழக நிர்வாக அமைப்பு சார்ந்த கூட்டங்கள் பல்கலைக் கழகங்களில் நடைபெற வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. துணைவேந்தர்கள் இல்லாமல் சில பல்கலைக்கழகங்களில் பணிகள் நடைபெறுவது தாமதமாகி வருவதால் துணை வேந்தர்களின் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Read Previous

தமிழகத்தில் உயர்கிறதா தியேட்டர் கட்டணம்?..!!

Read Next

புதிய கற்காலக் கோடரிக் கருவி கண்டெடுப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular