தற்பொழுது பெருமளவில் பேசப்படும் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் சம்பவம் தமிழகம் முழுவதும் பெறும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது. இந்த கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் குடித்து 65 பேர் இதுவரை உயிரிழந்தனர். கள்ளச்சாராயம் விற்பனை செய்வோரை கடுமையாக தண்டிக்கும் வகையில் தமிழக சட்டப்பேரவையில் மதுவிலக்கு சட்டத்தில் திருத்த மசோதா கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.
முன்னதாக சட்டப்பேரவையில் இந்த சட்ட மசோதா மீதான விவாதத்தில் பேசிய அமைச்ச துரைமுருகன் “பக்கத்து மாநிலங்களில் மது விற்பனை செய்யும் போது இங்கு எப்படி விற்பனை செய்யாமல் இருக்க முடியும்..? எரியும் நெருப்பு வளையத்தில் எப்படி கற்பூரம் எரியாமல் இருக்க முடியும்..? தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று அனைவரும் கோரிக்கை வைக்கின்றனர். ஆனால் கடுமையாக உழைத்த ஒருவனுக்கு மது தேவைப்படுகிறது.
இதனால் தான் டாஸ்மார்க் கடைகள் நடத்தப்பட்டு வருகின்றன. டாஸ்மார்க் கடைகளில் விற்கப்படும் மதுவில் பெருமளவில் கிக் இல்லை என்பதால் தான் பெரும்பாலானோர் கள்ளச்சாராயத்தை தேடி செல்கின்றனர் குடிக்கின்றார்கள்”, என அமைச்சர் துறைமுருகன் பேசியிருந்தார். இவரின் பேச்சுக்கு பல தலைவர்களும் கடும் கண்டனத்தை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரமேலதா விஜயகாந்த் “டாஸ்மார்க்கில் விற்கப்படும் மதுபானத்தில் கிக் இல்லாததால் தான் மக்கள் கள்ளச்சாராயத்தை வாங்கி அருந்துகிறார்கள் அமைச்சர் கூறி இருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது. கல்வராயன் மலையில் ஆளும் கட்சியினரின் ஆதரவோடு தான் கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் ஒட்டு மொத்த நாட்டு மக்களையும் குடிகாரர்களாக இந்த அரசாங்கம் மாற்றியுள்ளது. 2023 ஆம் ஆண்டில் கள்ளச்சாராயத்தில் 22 பேர் பரிதாபமாய் உயிர்இழந்துள்ளனர். ஆனால் இந்த அரசுக்கு இப்பொழுது தான் இது குறித்து தெரிய வந்தது. தமிழ்நாட்டில் கள்ளச்சாரயத்தால் இனி ஒரு உயிரிழப்பு கூட ஏற்படக்கூடாது. தற்பொழுது நடந்த கள்ளக்குறிச்சி சம்பவத்தில் கைது கைது செய்யப்பட்டவர்களுக்கு இந்த புதிய சட்டம் பொருந்துமா..? அவர்கள் இந்த சட்டத்தின் அடிப்படையில் தண்டிக்கப்படுவார்களா..? என்பதை தமிழக அரசு விளக்கம் தெரிவிக்க வேண்டும். கள்ள சாராயம் குடிப்பவர்கள் தங்களை பார்த்து திருந்தினால் தான் உண்டு. இவர்களை வேறு யாராலும் திருத்த முடியாது. விட்டில் பூச்சிகள் தானாகவே விளக்கில் விழுந்து இறந்து விடுவதை போல அவர்கள் கள்ளச்சாராயத்தில் விழுந்து இறந்து விடுகிறார்கள். எனவே நாம் நடந்து முடிந்ததை மறந்து நடக்கப் போவதை பார்ப்போம்”, என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.