ஆவணி அவிட்ட நட்சத்திரமானது வருடத்திற்கு ஒருமுறை சஞ்சரிக்கும் இந்த நாளில் பலவிதமான சிறப்பு அம்சங்கள் நடக்கும்.
ஆவணி மாதத்தில் அவிட்டமும் பௌர்ணமியும் ஒரே நாளில் இணைந்து வரும் இந்த நாளை ஆவினி அவிட்ட பௌர்ணமியாக கொண்டாடப்படுகிறது, இந்நாளில் பெருமாள் ஹயக்ரீவராக அவதாரம் எடுத்து வேதங்களை அசுரர்களிடமிருந்து காப்பாற்றியதாக புராணங்கள் கூறுகிறது, ஆவணி அவிட்டம் நாளில் கடந்த ஆண்டு செய்த பாவங்கள் விமோச்சனம் பெறுவதற்காக ஜனேய் அல்லது ய்ஜ்பவித் புதிய நூலை அணிவித்துக் கொள்கின்றனர், மேலும் பூணூல் நூலை மாற்றிக் கொள்ளும் பொழுது நதிக்கரையோரம் ஸ்லோகங்களை உச்சரித்து மாற்றிக் கொள்கின்றனர், இப்படி மாற்றி கொள்வதன் மூலம் புதிய மாற்றங்கள் அல்லது புதிய தொடக்கத்தை இந்த பூணூல் நூல் குறிக்கிறது, இந்த நாளில் விரதம் இருந்து பூணூல் மாற்றிக் கொள்வதனால் நன்மை நடக்கும் என்றும் நம்புகின்றனர்..!!