காலநிலை மாற்றம் நிகழ்வது போல உடல் நிலையிலும் இக்காலகட்டத்தில் மாற்றம் நிகழ்கிறது. அதற்கு முக்கிய காரணம் காலநிலை மட்டுமல்லாமல் நாம் உண்ணக்கூடிய உணவு பழக்க வழக்கங்களும் கூட தான். கூல்ட்ரிங்க்ஸ் பேக் செய்யப்பட்ட பழச்சாறுகள், பாக்கெட்டில் அடைத்து வைக்கப்பட்ட திண்பண்டங்கள் மற்றும் இனிப்பு பண்டம் சர்க்கரை சேர்க்கப்பட்ட கலர் கலரான மிட்டாய்கள் இவை அனைத்தும் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து சர்க்கரை போன்ற நோய்களை உடலில் உண்டாக்குகிறது. இவற்றின் முழுமையாக தவிர்க்க வேண்டும்.
மேலும் கொண்டைக்கடலை, புளி, துவரம் பருப்பு, கடலை பருப்பு, உருளைக்கிழங்கு கொத்தவரங்காய், காராமணி, கமலா ஆரஞ்சு போன்றவற்றை செரிமான பிரச்சனையை உண்டாக்குவதால் அதை வாரத்திற்கு ஒருமுறை எடுத்துக் கொள்ளலாம். மேலும் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள காய்கறிகள் பல வகைகள் இவற்றை சாப்பிடலாம்.