இசிஆர் ரோட்டில் குறுக்கே வந்த பசு மாடு..!! நொடி பொழுதில் நடந்த கொடூர விபத்து..!!

சென்னையை அடுத்த வடபழனி அழகிரி நகர் பகுதியை சார்ந்தவர் விக்னேஷ். இவருடைய நண்பர்களான சூலப்பாளையம் எம்ஜிஆர் நகரை சார்ந்த ராஜேஷ், ஏழுமலை, மேற்கு மாம்பழத்தை சார்ந்த யுவராஜ் உள்ளிட்ட ஐந்து பேர் சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு சென்று விட்டு நேற்று காரில் சென்னைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

இதனை தொடர்ந்து இந்த கார் செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அருகே உள்ள வயலூர் என்ற பகுதியில் கிழக்கு கடற்கரை சாலையில் அதிவேகமாய் வந்து கொண்டிருந்தது. அப்பொழுது திடீரென பசு மாடு ஒன்று சாலையின் குறுக்கே ஓடி உள்ளது. இதை பார்த்த ஓட்டுநர் மாடு மீது மோதாமல் இருக்க காரை இடது புறமாக திருப்பி உள்ளார். சாலையோரம் இருந்த மரத்தின் மீது அதி வேகமாக கார் மோதியது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ராஜேஷ், ஏழுமலை, வெங்கடேஷ் உள்ளிட்ட மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாய் உயிர் இழந்துள்ளனர்.

மேலும் இரண்டு பேரும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர், இதை கண்ட  மக்கள் காரை அறுத்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இருப்பினும் செல்லும் வழியிலேயே யுவராஜ் மற்றும் மற்றொரு வாலிபர் என்று இரண்டு பேரும் பரிதாபாய் உயிர் இழந்தனர். இதனிடையே சம்பவ இடத்திற்கு சென்ற சதுரங்கப்பட்டினம் காவல்துறையினர் உயிரிழந்த மூன்று பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார். இந்த விபத்து கிழக்கு கடற்கரை சாலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read Previous

முத்துராமலிங்க தேவர் குறித்து அவதூறு..!! சவுக்கு சங்கர் மீது எட்டாவது வழக்கு பதிவு..!!

Read Next

விராட் கோலிக்கு போட்டியை எப்படி வெல்ல வேண்டும் என்பது தெரியும் – மிஸ்பா உல் ஹக் பாராட்டு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular