இசைக்கும் எங்களுக்கும் நெருக்கமான உறவு – மு.க.ஸ்டாலின் பேச்சு..!!

இசைக்கும் எங்களுக்கும் நெருக்கமான உறவு இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு டாக்டர்.ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் வேந்தர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். இதில் பேசியபோது, இசைக்கும் எங்கள் குடும்பத்துக்கும் நெருக்கமான உறவு உண்டு. எனது தாத்தா பாட்டுப்பாடுவதில் வல்லவர்; கவிதைகளை மட்டுமல்ல எண்ணற்ற பாடல்களை கலைஞர் எழுதியுள்ளார். அனைத்து பல்கலைக்கழகங்களின் வேந்தர்களாக முதலமைச்சரே இருக்க வேண்டும். கல்வி பொதுவான பட்டியலில் இருந்து மாநில அரசின் பட்டியலுக்கு மாற்றினால்தான் அனைவருக்கும் கல்வி, எல்லோருக்கும் உயர் கல்வி என மாற்ற முடியும். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

Read Previous

பி.சுசிலாவிற்கு கெளரவ டாக்டர் பட்டம்..!!

Read Next

காங்கோவில் கூட்ட நெரிசலில் சிக்கி 37 பேர் பலி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular