
இஞ்சியின் மகத்துவத்தை அறிந்து கொள்ள இதனை நாம் படிப்போம்..
இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட்டு வருவதன் மூலம் வயிறு நோய்கள் தீரும் உடல் எடை குறையும், இஞ்சி துவையல் பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல் களைப்பு மார்பு வலி போன்ற தீராத பிரச்சனைகளும் தீரும், அதேபோல் இஞ்சி சாறில் வெள்ளம் கலந்து சாப்பிட்டு வர வாத கோளாறு நீங்கி பலம் ஏற்படும், இஞ்சியை சுட்டு உப்பில் தோய்த்து சாப்பிட பித்த கப நோய்கள் தீரும், இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம் அஜீரணம் வாய் நாற்றம் தீரும் மேலும் சுறுசுறுப்பு கூடும், இஞ்சியை துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம் இரைச்சல் தீரும், காலையில் இஞ்சி சாறில் உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்தம்,தலைச்சுற்று, மலச்சிக்கல், போன்றவை சரியாகும், அதேபோல் அசைவ குழம்புகள் மட்டுமல்லாமல் சைவ குழம்புகளிலும் சிறுதுண்டு இஞ்சி சேர்ப்பதன் மூலம் குழம்பு ருசியாகவும் செரிமான தன்மையை தரக்கூடியதாகவும் இருக்கும், அசைவ குழம்புகளில் இஞ்சியின் வாசனையும் இஞ்சியின் சுவையும் அந்த அசைவ குழம்பில் இன்னொரு முறை சாப்பிட தூண்டும்…!!