இடமாற்றம் செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு குட் நியூஸ்..!! அதிரடி அறிவிப்பை வெளியிட்ட பள்ளி கல்வித்துறை..!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு விரைவில் தொடங்க உள்ளது. இந்நிலையில் பள்ளி கல்வித்துறை செயலாளர் பள்ளி கல்வித்துறை இயக்குனருக்கு கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளார்.

அதில் குறிப்பிட்டு இருப்பது “பள்ளி கல்வித்துறையில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி இயக்கத்தில் பணியாற்றும் 500 ஆசிரியர் பயிற்றுநர்கள் 2021 2022 ஆம் கல்வியாண்டில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இதனை எதிர்த்து இடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் சென்னை உயர்நீதிமன்றத்திலும், மதுரை கிளையிலும் வழக்கு தொடர்ந்து உள்ளனர்.

இந்த வழக்கின் மீதான விசாரணை ஆசிரியர் பயிற்சிநர் பதவியில் இருந்து பட்டதாரி ஆசிரியர்களாக கடந்த 2021 -22 ஆம் கல்வியாண்டில் இடமாற்றம் செய்யப்பட்ட 500 பேருக்கு பொது இடம் மாறுதல் கலந்தாய்வில் முன்னுரிமை அளிக்க அனுமதி வழங்க கோரி பள்ளி கல்வித்துறை இயக்குனர் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த கோரிக்கை பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டது. அதன் அடிப்படையில் 2021 -22 ஆம் ஆண்டில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான இடமாற்றம் செய்யப்பட்ட 500 பேருக்கு நடப்பு ஆண்டில் பொது இடம் மாறுதல் கலந்தாய்வில் முன்னுரிமை அளிக்க அரசு அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது”, என குறிப்பிடப்பட்டுள்ளது.

Read Previous

முழு கொள்ளளவை எட்டிய பேச்சிப்பாறை அணை..!! திற்பரப்பு அருவியில் குளிக்க தடை..!!

Read Next

தமிழகத்தில் கன முதல் அதிக கன மழை பெய்ய வாய்ப்பு..!! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular