
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிடம் ஒன்றியத்திற்குட்பட்ட கொன்ன காட்டு படுகை கிராமத்தில் மயான கொட்டகை உள்ளது. இந்த பகுதியில் சுமார் 650 க்கு மேற்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்துக்கான மயான கொட்டகை சிதிலமடைந்து இருந்தது. சுமார் 200 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த மயான கொட்டகை சேதம் ஏற்பட்டு இடிந்து விழுந்தது. இதனால் சடலங்களை ஏறியூட்ட சிரமம் ஏற்பட்டுள்ளது.