
இந்த நவீன காலகட்டத்தில் அனைவரும் சிரமப்படும் ஒன்றுதான் இந்த உடல் எடை கூடுதல். இந்த உடல் எடை கூடுதல் என்பது சத்தான உணவு முறையை பின்பற்றாமல் கண்ட உணவுகளை எல்லாம் சாப்பிடுவதால் ஏற்படுகிறது. சாப்பிடும் போது டேஸ்டாக இருக்கும் பட்சத்தில் ரெடிமேட் உணவுகளை கூட மக்கள் விரும்பி சாப்பிடுகிறார்கள். இதனால் உடல் எடை கூடி சிரமத்திற்கு ஆளாகின்றனர். உடல் எடையை குறைக்க வேண்டுமானால் காலை உணவில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறுகிறார்கள்.
சமீபத்தில் ஒரு ஆய்வு உடல் எடை பராமரிப்பில் காலை உணவின் பங்கு தான் முக்கியமாக இருக்கிறது என்று வெளியிடப்பட்டது. உடல் எடையை குறைக்க எதை சாப்பிட வேண்டும்? எதை சாப்பிடக்கூடாது என்றும் பலருக்கும் தெரிவதில்லை. நாம் எதை எப்படி எப்போது சாப்பிடுகிறோம் என்பதை பொறுத்து தான் உடல் எடை குறைகிறதா இல்லை கூடுகிறதா என்று அர்த்தம்.
காலையில் எழுந்ததும் காபி டீ குடிக்கும் பழக்கத்தை முற்றிலுமாக தவிர்த்து வெதுவெதுப்பான நீரில் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் சிறிதளவு தேன் கலந்து குடியுங்கள். இல்லையென்றால் கிரீன் டீ குடிக்கலாம். அதிக அளவு தண்ணீர் குடிப்பது உடல் எடையை குறைக்க வழி வகுக்கும். மேலும் ஒரு நாளைக்கு காலை மற்றும் மதியம் இரவு என ஒவ்வொரு வேலைக்கும் 300 முதல் 350 கலோரி வரை மட்டுமே இருக்குமாறு நாம் உணவை உட்கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு ஒரு லிட்டர் வெதுவெதுப்பான நீரை குடிப்பது செரிமானத்தை மேம்படுத்தி உடல் எடையை குறைக்க வழிவகுக்கும். ஓட்ஸ், முட்டையின் வெள்ளைக்கரு ஆம்லெட் போன்றவற்றை காலை உணவாக நாம் எடுத்துக் கொள்ளலாம். அரிசி சம்பந்தமான உணவுகளை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக முளைகட்டிய வயிறு வகைகளை சாப்பிடலாம். மதியம் அதிக அளவு காய்கறிகளை உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும். இரவு ஒரு கிண்ணம் வித் சூப் அல்லது ஒரு பவுல் பழங்கள் போன்றவற்றை இரவு உணவாக எடுத்துக் கொள்ளலாம். உடல் எடையை குறைப்பதற்கு உடற்பயிற்சி மிகவும் அவசியம். அதேபோல் நடை பயிற்சியும் அவசியம் ஒரு நாளைக்கு முடிந்தது 5000 ஸ்டெப்ஸ் ஆவது நடக்க முயற்சி செய்யுங்கள். இதையெல்லாம் ஃபாலோ செய்ய தொடங்கினாலே போதும் உடல் எடை குறைவதை நாம் கண்கூட பார்க்கலாம்.