
நமது உடலை நீரேற்றமாக வைத்துக் கொள்ள நாம் அதிகம் விரும்பி குடிக்கும் ஒரு விஷயம் இளநீர். இந்த வெயிலுக்கு அது ஒரு சரியான தீர்வாக காணப்படுகிறது. அதை வைத்து இட்லி செய்வது பற்றி எப்போதாவது யோசித்து இருக்கிறீர்களா. இந்த இளநீர் இட்லி நமது உடல் சூட்டை தணிக்க ஒரு சரியான மருந்தாகும். இன்று அந்த இளநீர் இட்லியை எப்படி செய்வது என்று காண்போம்.
தேவையானவை:
இட்லி அரிசி – ஒரு கிலோ,
உளுந்து – 1/4 கிலோ,
வெந்தயம் – 50,
இளநீர் – தேவையான அளவு,
உப்பு – சிறிதளவு.
செய்முறை:
இட்லி அரிசி வெந்தயம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு அதை நன்றாக கழுவி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். உளுந்தை தனியாக நாம் ஊற வைக்க வேண்டும். அரிசி மற்றும் வெந்தயத்தை கிரைண்டரில் போட்டு தண்ணீருக்கு பதிலாக இளநீர் சேர்த்து அரைத்து வைக்கவும்.
அதேபோல உளுந்தையும் தண்ணீர் சேர்க்காமல் இளநீர் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். இரண்டையும் ஒரே பாத்திரத்தில் போட்டு உப்பு சேர்த்து இளநீர் கரைசலையும் சேர்த்து கலந்து குளிக்க வைக்கவும். அதன் பிறகு எப்போதும் போல இட்லியை ஊற்றி வேக வைத்து எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான மற்றும் சத்தான இளநீர் இட்லி தயார்.