இட்லி, தோசை மற்றும் ஆப்பம் அனைத்திற்கும் ஏற்ற சுவையான வடகறி செய்வது எப்படி..??

 

தேவையானவை:

கடலைப்பருப்பு – 150 கிராம்,
பெரிய வெங்காயம் – 2 ,
பெரிய தக்காளி – ஒன்று,
கரம் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன்,
இஞ்சி – பூண்டு விழுது – 2 டீஸ்பூன்,
பச்சை மிளகாய் – 5,
லவங்கம், பட்டை, ஏலக்காய் – தலா 2,
பிரிஞ்சி இலை – ஒன்று,
சோம்பு – ஒரு டீஸ்பூன்,
கறிவேப்பிலை,
கொத்தமல்லி இலை – சிறிதளவு,
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் – விருப்பத்திற்கேற்ப,
பொட்டுக்கடலை மாவு – 3 டீஸ்பூன்,
எண்ணெய் – தேவையான அளவு,
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
தக்காளியை நறுக்கி மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றிக் கொள்ளவும். கடலைப்பருப்பை 2 மணி நேரம் ஊற வைத்து, தண்ணீரை வடிகட்டி உப்பு சேர்த்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். இட்லித் தட்டில் எண்ணெய் தடவி இந்தக் கலவையை வைத்து இட்லி போல் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சோம்பு, ஏலக்காய், லவங்கம், பட்டை, பிரிஞ்சி இலை சேர்த்து வதக்கி, நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம், கீறிய பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். அதில் இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து, சிறிது நேரம் வதக்கியவுடன், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து சிறிது நேரம் கிளறவும்.
பிறகு அரைத்த தக்காளி விழுது, உப்பு சேர்த்து நன்கு எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, நன்கு கொதி வந்தவுடன், வேக வைத்த கடலைப்பருப்பை ஒன்றிரண்டாக உதிர்த்து, கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவி சிறிது நேரம் கொதிக்கவிடவும். கடைசியில் பொட்டுக்கடலை மாவை சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் இறக்கவும்.
இதை இட்லி, தோசை, ஆப்பத்துடன் பரிமாறலாம்.

Read Previous

மாமனார் இல்லாத புகுந்த வீடு எப்படி இருக்கும் தெரியுமா..??

Read Next

ஒரே வாரத்தில் உடல் எடை குறைய இதை மட்டும் சாப்பிடுங்க போதும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular