இட்லி பூ செடி வெற்றி தரும் வெட்சி பூக்கள் : வீட்டில் பணம் மகிழ்ச்சி பெருக உதவும் வாஸ்து செடிகள்…!!

செடிகளின் மூலம் நமக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம் ஏற்படும் என்பது மறுக்க முடியாத ஒன்று அந்த வகையில் நமக்கு அதிர்ஷ்டத்தை தரக்கூடிய பல பூச்செடிகள் உள்ளன இந்த செடிகளை வளர்த்து வருவது குடும்பத்தின் மகிழ்ச்சி செல்வத்தை வாரி வழங்கும் அதில் ஒரு சிலவற்றை மட்டும் இங்கு பார்ப்போம்…

1. பன்னீர் ரோஜாவை சொல்லலாம் பன்னீர் பாசம் வீட்டிற்குள் வீசினாலே லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்கும் எனவே பன்னீர் ரோஜாவை வீட்டின் முன்பு வைத்து வளர்க்கலாம்.
2. அடுத்ததாக மல்லிகை செடியை சொல்லலாம் இறைவன் சிவபெருமானுக்கு சூடப்படும் பூவாகும். சர்வ வியாதிகளை குணப்படுத்துவதில் மல்லிகைக்கு நிகர் இல்லை எனவே மல்லிகைச் செடியை கிழக்கு திசையில் நன்றாக சூரிய வெளிச்சம் படும்படியாக வைத்து அளக்கும் போது நம்முடைய மன அழுத்தம் குறையும்..
3. துளசி செடியை கிழக்கு திசையில் வைத்து வளர்க்க வேண்டும் மிகச்சிறந்த கிருமிநாசினியாக துளசியின் மீது சூரிய கதிர்கள் படும்போது ஏராளமான நன்மைகள் அந்த இடத்தை சுற்றி வளர்கிறது நேர்மறை எண்ணங்களை வாரி வழங்குகிறது ஒரு வேலை கிழக்கு திசையில் துளசி செடியை வளர்க்க முடியாவிட்டால் வடகிழக்கு திசையில் வளர்க்கலாம். வடகிழக்கிலும் வளர்க்க முடியாவிட்டால் வட திசையில் துளசி செடியை வளர்க்கலாம் எக்காரணம் கொண்டும் தெற்கு திசையில் வளர்க்கக்கூடாது..
4. வெள்ளை நிறத்திலான லில்லி செடிகளையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம் காற்றை தூய்மைப்படுத்தும் ஆற்றல் இந்த லில்லிக்கு உள்ளது இந்த லில்லிக்கு சூரிய வெளிச்சம் அவ்வளவாக தேவைப்படாது என்பதால் பெட்ரூம் ஹால் டைனிங் டேபிள் உள்ளிட்ட பகுதிகளிலும் வைக்கலாம் இதனால் வீட்டுக்குள் நேர்மறையான சக்தி கிடைப்பதுடன் குடும்பத்தில் இணக்கமான சூழல் எப்போதுமே இருக்கும்..
5. அதேபோல் இட்லி பூக்களையும் குறிப்பிடலாம். இதனை வெட்சி பூ என்பார்கள் அந்த காலங்களில் மன்னர்கள் போருக்கு செல்லும்போது இந்த பூவை சூடிக்கொண்டு செல்வார்களாம் இந்த பூவே வைத்து சென்றால் கட்டாயம் வெற்றி கிடைக்கும் என்று நம்பினார்களாம். அதனால்தான் இதற்கு வெற்றி பூ என்றும் சொல்வார்கள் இந்த பூவை வீட்டில் வைத்து வளர்ப்பவர்களுக்கு வெற்றி தானாக தேடி வரும். அத்துடன் வாசலில் இதனை வைத்து வளர்க்கும் போது மகாலட்சுமி வாசம் செய்வது போல் காணப்படும்…
6. இட்லி பூ செடி அழகுக்காகவும் அதிர்ஷ்டத்துக்காகவும் வளர்க்கப்படும் வெட்சி செடியாகும். இலைகள் அற்புதமான மருத்துவ குணங்களைக் கொண்டது இந்த செடியின் பூக்கள் உடல் சோர்வு காய்ச்சலை குணப்படுத்தக்கூடியது. உடல் அசதியாக இருந்தால் அல்லது வயிற்றுப்போக்கு இருந்தால் இந்த பூக்களே மருந்தாகிறது..!!

Read Previous

புற்றுநோய் அபாயத்தை குறைக்க உதவும் வாழை இலை : அவசியம் தெரிந்து கொள்ளுங்கள் வாழை இலையின் மகத்துவத்தை..!!

Read Next

தமிழ்நாடு பொதுப்பணித் துறையில் வேலை..!! 760 காலிப்பணியிடங்கள்..!! உடனே விண்ணப்பியுங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular