தற்போது உள்ள காலகட்டத்தில் இளைஞர்கள் தங்களுக்கு ஏற்படும் சிக்கலை தீர்க்க வழி தெரியாமல் சில தவறான முடிவை எடுக்கிறார்கள். ஒரு பிரச்சனைக்கு தற்கொலை என்பது தீர்வாகாது . இதனை புரிந்து கொள்ளாமல் மனஉளைச்சலில் ஈடுபட்டு தற்கொலை முயற்சியை மேற்கொள்கிறவர்கள் பலர் உள்ளனர். அதிலும் ஆண்களை காட்டிலும் பெண்களே அதிகமாக இத்தகைய முடிவுகளை எடுக்கிறார்கள். இந்நிலையில் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து கீழே விரிவாக காண்போம்.
சென்னை விருகம்பக்கத்தில் கல்லூரி மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் உள்ளாகியது. அது குறித்து விசாரித்த போது, அப்பெண்ணின் புகைப்படத்தை மர்ம நபர் ஒருவர் ஆபாசமாக சித்தரித்து, இன்ஸ்டாகிராமில் மிரட்டியுள்ளார். இதனால் மனவுளைச்சலுக்கு ஆளாகியதில் அப்பெண் தற்கொலை செய்துகொண்டார் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அப்பெண்னை மிரட்டிய மர்ம நபர் யார் என்பதை விருகம்பாக்கம் காவல் துறையினர் விசாரித்து வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.