இதனால்தான் இந்த ஆண்டு எனது பிறந்தநாள் கொண்டாட்டம் இல்லை..!! வெளிப்படையாய் பேசிய இசைஞானி இளையராஜா..!!

தமிழ் சினிமா உலகில் “அன்னக்கிளி” என்கின்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் இசைஞானி இளையராஜா. இவர் இதுவரை திரையுலகில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து கொடுத்துள்ளார்.

மேலும் இவர்  7000க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். மேலும் இவர் பல தேசிய விருதுகளையும் வாங்கி பெருமை சேர்த்துள்ளார். தற்போது இசைஞானி இளையராஜா தனது 81 வது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். இவருக்கு பல  திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் வந்து வாழ்த்து தெரிவித்து சென்றனர்.

இந்நிலையில் இசைஞானி இளையராஜா தற்போது சென்னை கோடம்பாக்கத்தில் தன் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசி உள்ளார். அப்பொழுது செய்தியாளர்களிடம் பேசிய இசைஞானி இளையராஜா “என் பிறந்த நாளுக்காக நீங்கள் எனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறுகிறீர்கள். ஆனால் நான் எனது மகளை இழந்த துக்கத்தில் இருப்பதால் இன்று பிறந்த நாளை கொண்டாட வில்லை”, என அவர் கூறியுள்ளார்.

இசைஞானி இளையராஜாவின் மகளும், பாடகிமான பவதாரணி கடந்த ஜனவரி 25ஆம் தேதி உடல்நல குறைவின் காரணமாய் சிகிச்சை பலனின்றி பரிதாபமாய் உயிர் இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Previous

திராவிட மாயயை உடைத்து எறிந்து மக்கள் வெளியே வாருங்கள்..!! தமிழிசை சௌந்தர்ராஜன்..!!

Read Next

ஈஸ்வரி வீட்டிற்கு திரும்புவாரா..? அல்லது மாமியார் மருமகள் சண்டை தொடருமா..? பாக்கியலட்சுமி நெடுந்தொடரின் இந்த வாரம் ப்ரோமோ..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular