
உளுத்த வடை காரவடை மெதுவடை என வடைகள் பல வகை உண்டு அந்த வகையில் இந்த முறை பீட்ரூட் வரை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்வோம்..
பீட்ரூட் வடை எப்படி செய்வது என்று அதற்கான பொருட்கள் என்னென்ன என்று முதலில் பார்ப்போம், பீட்ரூட் கால் கிலோ, பெரிய வெங்காயம் மூணு, கடலைப்பருப்பு அரை கிலோ, சோம்பு ஒரு ஸ்பூன், பட்டை இரண்டு, லவங்கம் 4, காய்ந்த மிளகாய் ஆறு, கொத்தமல்லித்தழை ஒரு கைப்பிடி அளவு, கருவேப்பிலை ஒரு கொத்து, உப்பு தேவைக்கேற்ப, பீட்ரூட் வடை செய்வது எப்படி என்று பார்ப்போம் முதலில் கடலைப்பருப்பை அரை மணி நேரம் ஊறவைத்து அதனுடன் காய்ந்த மிளகாய் சோம்பு, பட்டை, கிராம்பு சேர்த்து தண்ணீர் அதிகம் விடாமல் கொரகொரப்பாக அரைக்கவும், பிறகு வெங்காயத்தை பொடியாகவும் பீட்ரூட்டை துருவியும் வைத்துக்கொள்ள வேண்டும், துருவிய பீட்ரூட் வெங்காயம் பொடியாக நறுக்கிய கருவேப்பிலை கடலைப்பருப்பு விழுது கொத்தமல்லித்தழை தேவையான அளவு உப்பு, இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக பிசைந்து வைத்துக்கொள்ள வேண்டும், பிறகு பிசைந்த உடனே சிறு உருண்டைகளாக உருட்டி பின் வடை போல் தட்டவும், இப்போது கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்த பிறகு வடைகளை போட்டு நன்றாக இரு பக்கமும் திருப்பிவிட்டு வேக விட வேண்டும், வெந்த உடனே எடுக்கவும் சுவையான பீட்ரூட் வடை தயார், இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் இது மாலை வேளையில் டீ காபி ஆகியவைகளுடன் சிற்றுணர்வாக சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்..!!