ஆண்டுதோறும் தமிழகத்தில் ஆடி 18ம் நாளான ஆடிப்பெருக்கு திருநாளை மிக சிறப்பாக கொண்டாடுவது வழக்கம், அந்த நாட்களில் டெல்டா மாவட்டங்களில் காவேரி நீர் திறக்கப்பட்டு நீர்நிலைகள் எல்லாம் நிரம்பி செல்லும் காட்சி பார்ப்போர்களை எல்லாம் பரவசம் செய்யும், ஆடிப்பெருக்கு அன்று காவிரிலையோ அல்லது கங்கையிலோ சென்று பூ பலம் வெற்றிலை சூடம் பத்தி தாலி கதம்பம் என்று காவேரிக்கு வைத்து காவேரியை வணங்குவதனால் நல்லது நடக்கும் என்றும் நீர்வளம் குறையாமல் நீடுழி வாழ்வார் என்றும் சொல்லப்படுகிறது.
மேலும் ஆடிப்பெருக்கு நீ நிலைகளுக்கு உகந்த திருவிழாவாக கொண்டாடப்படுகிறது அன்று அருகில் உள்ள ஆறு, குளம், ஏரி என்று சென்று வழிபட வேண்டும் இல்லை என்றால் நம் வீட்டில் அருகில் உள்ள தண்ணீர் குழாய்களுக்கு சூடம் வைத்து பூ வைத்து கும்பிட்டு வருவதால் நல்லது நடக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் ஆடி மாதத்தில் காற்று அதிகம் வீசுவோம் என்றும் ஆடி காற்றில் அம்மியும் நகரும் என்றும் முன்னோர்கள் சொன்ன வாக்கியமும் உண்டு..!!