இது ஆண்களுக்கான பதிவு.. ஆண்கள் தாது பலம் பெற.. கட்டாயம் படியுங்கள்..!! பயன் பெறுங்கள்..!!

தாது என்பது விந்து

 

தாது பலப்பட

 

ஓரிதழ் தாமரை இலையை நாள்தோறும் விடிவதற்கு முன் சிறிதளவு மென்று தின்று பால் அருந்தி வர ஒரு மண்டலத்தில் தாது பலவீனம் தீரும்

 

அம்மான் பச்சரிசி இலையை தூதுவேளை இலையுடன் துவையல் செய்து சாப்பிட்டு வர தாது பலப்படும்

 

அம்மான் பச்சரிசியை கீழாநெல்லியுடன் சமன் கலந்து காலை மதியம் இரு வேலையும் எருமை தயிரில் உண்ண தாது இழப்பு தீரும்

 

கருவேலம் பிசின் நெய்யில் வறுத்து பொடித்து இரண்டு கிராம் அளவுக்கு காலையில் சாப்பிட தாது பலப்படும்

 

ஒரு கிராம் தாமரை விதையை அரைத்து பாலில் கலந்து காலை மாலை சாப்பிட்டு வர தாது வளர்ச்சி அடையும்

 

துளசி விதை சூரணம் ஐந்து அரிசி எடை தாம்பூலத்துடன் சேர்த்துக்கொள்ள தாது கட்டும்

 

வறுத்த திப்பிலி பொடி அரை கிராம் தேனில் காலை மாலை கொடுத்து வர தாது இழப்பு தீரும்

 

கோரைக்கிழங்கு சூரணம் ஒரு கிராம் காலை மாலை தேனில் கொள்ள தாது விருத்தி உண்டாகும்

 

தேங்காய் துவையலில் கசகசா சேர்த்தரைத்து உணவுடன் சாப்பிட்டு வர தாது பலம் மிகும்

 

பிரண்டை உப்புடன் சாதிக்காய் சூரணம் சேர்த்து நெய்யில் கொடுக்க தாது இழப்பு தீரும்

 

தாலிக் கீரையை பருப்புடன் சமைத்து நெய் சேர்த்து உண்டு வர விந்து இழப்பு நீங்கி தாது பலப்படும் உடல் குளிரும்

 

விடத்தேர் பிசினை உலர்த்தி பொடித்து மூன்று கிராம் சிறிது கல்கண்டு பொடியுடன் பாலில் கலந்து சாப்பிட தாது பலம் மிகும்

 

பிராயன் பாலில் தேவையான அளவு வறுத்த கடலை மாவு பிசைந்து பட்டாணி அளவு மாத்திரை ஆக்கி காலை மாலை இரண்டு மாத்திரை சாப்பிட்டு வர தாது பலம் மிகும்.

 

குமரி என்னை காலை மாலை ஒரு தேக்கரண்டி கொடுக்க தாது இழப்பு தீரும் காரம் புளி நீக்க உணவு கொள்க

 

கானா வாலை சமூகம் தூதுவேளை பூ முருங்கைப்பூ ஒரு குவளை நீரில் போட்டு பாதியாக காய்ச்சி பாலும் கற்கண்டும் கலந்து ஒரு மண்டலம் கொள்ள தாது பலப்படும்

 

வாழைப்பூவை பருப்புடன் சமைத்து உண்ண தாது விருத்தி அடையும்

 

காரை பழத்தினை காலை மாலை உண்டுவர உள் வெப்பமாகன்று தாது பலப்படும்

 

நீர்முள்ளி விதை சூரணம் 40 கிராம் நெருஞ்சில் விதை 20 கிராம் வெள்ளரி விதை 10 கிராம் சிதைத்து ஒரு லிட்டர் நீரில் போட்டு 200 மில்லி லிட்டராக காய்ச்சி பனங்கல்கண்டு கலந்து காலை மாலை 100 மில்லி அளவாக ஒரு வாரம் கொள்ள தாது பலம் உண்டாகும்

 

வெடிக்காத தென்னம்பாளையில் உள்ள பிஞ்சுகளை பசும்பால் விட்டரைத்து எலுமிச்சங்காய் அளவு காய்ச்சிய பாலில் கலக்கி காலை மாலை 40 நாள்கள் கொடுக்க தாது நீர்ப்பு நீங்கி மிடுக்கு உண்டாகும்..

Read Previous

Lover’s Day: எனக்குள்ளே அக்காதல் பத்திரமாய் உறங்கட்டும்..!! காதலர் தினம் வாழ்த்துக்கள்..!!

Read Next

மஞ்சள், பால், மிளகின் ரகசியம் என்னவென்று உங்களுக்கு தெரியுமா..?? கட்டாயம் தெரிந்துகொள்ளுங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular