“இது என் ஊரு., உயிரோட இருக்கமாட்டிங்க” – இரயில் பயணியிடம் போதையில் தகராறு செய்த இளைஞர்கள்.!!

திருப்பூர் ரயில் நிலையத்தில் ரயிலில் ஏறிய போதை ஆசாமிகள் புகை பிடித்துக் கொண்டிருந்தனர். அதை தட்டிக்கேட்ட பயணியிடம் நீயும் உன் மனைவியும் உயிரோடு ஊடு போய் சேர மாட்டீர்கள் என்று மிரட்டி உள்ளனர். இந்த அதிர்ச்சி வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. இந்த சம்பவம் குறித்து இருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

திருப்பூர் ரயில் நிலையத்தில் சென்னை ஆலப்புழா ரயிலில் ஏறிய போதை இளைஞர் சிலர் அங்கு பயணம் செய்த பொதுமக்கள் இடையில் பிரச்சனை செய்தனர். மேலும் புகைபிடித்து கொண்டு அவர்கள் பயணம் செய்த நிலையில் பயணிகள் அதனை தட்டிக் கேட்டுள்ளனர்.

போதையில் இருந்த ஆசாமிகள் பயணிகளை பார்த்து “இது என் ஊரு, இங்கே நாங்கதான் சத்தமா பேசுவேன். நீயும் உன் பொண்டாட்டியும் உயிரோட இருக்க மாட்டாய்”. என சவால் விடுத்து உள்ளனர், இந்த சம்பவம் குறித்து அதிர்ச்சி காட்சிகள் சமூக வலைதளங்களில் வருகிறது. இந்நிலையில் ரயிலில் பயணம் செய்யும் போது பயணிகளை மிரட்டிய பவுன் மற்றும் அசோக் ஆகிய இரண்டு இளைஞர்கள் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.

Read Previous

பயங்கரவாத செயலுக்கு ஆட்கள் சேர்க்கும் பணியில் முன்னாள் அண்ணா பல்கலை., கௌரவ பேராசிரியர்..!! அதிரவைக்கும் சம்பவம்.!!

Read Next

லாரி மீது மோதி அப்பளம்போல நொறுங்கிய டெம்போ..!! 6 பேரின் உயிரை குடித்த விபத்தின் அதிர்ச்சி காட்சிகள்.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular