இது திமுகவின் திசை திருப்பும் முயற்சி..!! ஆர் எஸ் பாரதி விவகாரத்தில் பூகம்பத்தை கிளப்பிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை..!!

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது போராட்டங்களை தொடர்ந்து வருகின்றன. இந்நிலையில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திமுக மாணவர் அணி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் “நான் படித்த போது பி.ஏ படித்தாலே போர்டு வைத்துக் கொள்வார்கள் .தற்பொழுது நாய்கூட பி.ஏ பட்டம் வாங்குகின்றது. பட்டப்படிப்புகள் என்பது திராவிட இயக்கம் போட்ட பிச்சை”, என திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி பேசியது பெரும் பிரச்சினையை கிளப்பியது.

இந்நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விடுத்துள்ள செய்தி குறிப்பில் குறிப்பிட்டு இருப்பவை “எப்போதெல்லாம் திமுக ஆட்சிக்கும், பொதுமக்களுக்கும் இடையே பலத்தை எதிர்ப்பு வருகிறதோ அப்போதெல்லாம் அறிவாலய வாசலிலேயே இருக்கும் ஆர்எஸ் பாரதிய ஏவி விடுவார்கள் போல. கள்ளக்குறிச்சியில் திமுக ஆதரவோடு நடந்த கள்ளச்சாராய விற்பனையில் 65 உயிர்கள் பலியானதை திசைதிருப்பவே ஆர் எஸ் பாரதியை தற்பொழுது களம் இறக்கி உள்ளனர் திமுகவினர்.

முன்பு ஒரு முறை தமிழகத்தில் பட்டியல் சமுதாய மக்களுக்கு நீதிமன்ற பதவிகள் கிடைத்தது திமுக போட்ட பிச்சை என்று இவர் பேசினார். இன்று தமிழகத்தில் மருத்துவர்கள் உருவானது திமுக போட்ட பிச்சை என்று பேசியுள்ளார். அதோட தமிழகத்தில் இன்று நாய் கூட பிஏ பட்டம் வாங்குவது என்று ஒட்டுமொத்த மாணவ சமுதாயத்தையே அவமானப்படுத்தி உள்ளார் ஆர் எஸ் பாரதி.

தமிழகத்தில் 1967 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த திமுக இதுவரை ஐந்து அரசு மருத்துவக் கல்லூரிகளை மட்டுமே கட்டி உள்ளது என்பதை மறந்து ஆர் எஸ் பாரதி தமிழகத்தில் மருத்துவர்களை உருவாக்கியதே திமுக தான் என்று போலி பெருமை பேசி வருகின்றார். திமுக முதல் குடும்பத்தினர் மீதுள்ள வழக்குகளுக்கு வாதாட வேண்டுமென்றால் டெல்லி மும்பையில் இருந்து பல மூத்த வழக்கறிஞர்களையும் தமிழக அரசு சார்பாக வழக்கு தமிழகத்தின் மூத்த வழக்கறிஞர்களையும் தேர்ந்தெடுக்கும் கோபாலபுரம் குடும்பம் தங்கள் பெற்றோரின் கடின உழைப்பாலும் தங்களின் கடும் முயற்சியாலும் படித்து முன்னேறும் மாணவர் செல்வங்களை அவமானப்படுத்தி அவர்கள் வளர்ச்சிக்கு திமுக தான் காரணம் என்று கூறிக் கொள்ளும் ஆர் எஸ்  பாரதி போன்றவர்களை தான் திமுக உண்மையில் உருவாக்கியுள்ளது.

தமிழக மக்கள் அனைவரையும் பிச்சைக்காரர் என்ற ரீதியில் தொடர்ச்சியாக கொச்சைப்படுத்திக் கொண்டுள்ள திமுகவின் ஆணவப் போக்கும், ஆர் எஸ் பாரதியின் வாய் துடுக்கான பேச்சும் பெரும் கண்டனத்திற்குரியது. தமிழக மக்கள் அனைவரும் திமுகவினர் போன்றவர்கள் அல்ல, தமிழக மக்கள் தன்மானம் மிக்கவர்கள்”, என்று தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Read Previous

கள்ளக்குறிச்சி கள்ள சாராய விவகாரம்..!! சிபிஐ விசாரணை தேவையில்லை..!! தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் அறிக்கை..!!

Read Next

பட்டப்படிப்புகள் திராவிட இயக்கம் போட்ட பிச்சை..!! ஆர்ப்பாட்டத்தில் சர்ச்சையை கிளப்பி ஆர் எஸ் பாரதி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular