
ஜார்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவருமான ஹேமந்த் சோரன் நில மோசடி வழக்கில் கடந்த ஜனவரி மாதம் 31ஆம் தேதி அமலாக்க துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் ஜார்கண்ட் மாநில உயர் நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்கி உள்ளது.
சிறையில் இருந்து வெளியே வந்த ஹேமந்த் சோரன் தான் சிறையில் இருந்தது பற்றிய கருத்து தெரிவித்துள்ளார். அப்போது அவர் கூறுகையில் “நான் சதியால் தான் பாதிக்கப்பட்டேன். எனக்கு எதிராக சதி திட்டம் மற்றும் போய் குற்றச்சாட்டுகள் சுமத்தி என்னை ஐந்து மாதங்கள் சிறையில் வைத்துள்ளனர் .ஆனால் நீதிமன்றம் என்னை வெளியே அனுப்பி உள்ளது”, என்று அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக இந்த வழக்கின் வாதங்கள் ஜூன் 13ஆம் தேதி முடிவடைந்த நிலையில் வழக்கின் உத்தரவு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து நேற்று ஹேமந்த் சோரனுக்கு இரண்டு பேரின் உத்தரவாதத்துடன் தல ஐம்பதாயிரம் பினைத்தொகையுடன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது, ஜாமின் இருக்கும் போது மனுதாரர் எந்த குற்றமும் செய்ய வாய்ப்பில்லை. மேலும் முதன்மை பார்வையில் அவர் குற்றவாளி அல்ல என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து சட்ட நடைமுறைகள் அனைத்தும் முடிவடைந்து நேற்று மாலை 4 மணி அளவில் ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் சிறையில் இருந்து வெளியே வந்தார். அவரை ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தொண்டர்கள் உற்சாகத்தோடு வரவேற்றுள்ளனர்.