#பெண்மை …
💟பள்ளியறையில் மட்டுமல்ல சமையலறையிலும் அவளுக்கு துணை கொடு…
💟மாதத்தில் மூன்று நாட்கள் மனைவிக்கு தாயாகு.. மற்ற நாளெல்லாம் சேயாகு..
💟இரவிலே தாமதித்து இல்லம் செல்வதை இயன்றவரை குறைத்திடு…
💟இயலாத நிலையில் அவள் இருந்திடக் கண்டாலே , உறவுதனைத் தவிர்த்திடு..
💟சின்னச் சின்ன சண்டைகள் தினந்தோறும் போட்டுக்கொள்.. சினங்கூடி பெருஞ்சண்டை வராமல் பார்த்துக்கொள்…
💟அவள் கர்ப்பம் சுமைக்கையில்
நீ அவளைச் சுமந்திடு…
💟விடுமுறை நாட்களில் காலைவரை அவள் அழகாய் தூங்கட்டும்..அவள் படுக்கை அறை சென்று உன்கை தேநீர் வழங்கட்டும்..
💟உறவது முடிந்த பின்னே உன்பாட்டுக்கு தூங்காதே.. உன்னவள் உன் மார்பில் தூங்க ஓரிடம் கொடுக்க தவறாதே…
💟தாமதித்து வீடு வந்தால் தகுந்த காரணம் சொல்…
💟தப்பு உன்னில் இருந்தால் மன்னிப்பு கேள்…
💟வேலைக்குச் செல்லும் போதும், வேலைவிட்டு வந்த பின்னும் புன்னகை சேர்ந்த முத்தத்தை பூவையவளுக்கு போட்டுவிடு..
💟சிறப்பான நிகழ்ச்சி எதற்கும் அவளை கூட்டிச்செல்….
💟எடுப்பான பெண்ணைக் கண்டால் எட்டி நீயும் நின்று கொள்..
💟நோயிலே அவள் வீழ்ந்தால் பாயாகி விடு…
💟நோவொன்று அவள் கண்டால் தாயாகி விடு….
💟உன்னாலே அவள் வடிக்கும் கண்ணீர் ஆனந்தக் கண்ணீராக மட்டும் இருக்கட்டும்..
💟வேளை வரும்போதெல்லாம் வெளியே அழைத்து செல்..
💟வேதனை அவள் கொள்ளாமல் விருப்பங்களினை ஏந்தி கொள்..
💟அவளொரு குற்றம் செய்தால் அணைத்து புரிய வை…அன்னையாக நீ மாறி அவளை திருந்த வை…
💟அவளின் நட்புக்களை அவள் தொடற அனுமதி..
💟தலை நரைக்கும் காலத்திலும் சேர்ந்தே உறங்கிடு…
💟சாகப்போற நேரத்திலும் அவள்கை பிடித்து விடு….




